tamilnadu

img

உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்தி பயனடைய வேண்டுகோள்

உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்தி பயனடைய வேண்டுகோள்

கோவை, ஜூலை 12- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண் டும் என கோவை, சேலம் ஆட்சி யர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனியன்று செய்தியாளர்களி டம் பேசிய ஆட்சியர் பவன்குமார், தமிழக முதலமைச் சரின் அறிவுறுத்தலின்படி, ஊரக மற்றும் நகர்ப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டா லின்’ முகாம்கள் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 120 முகாம்களும், இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் செப்டம் பர் 14 வரை 96 முகாம்களும், மூன்றாவது கட்டமாக செப் டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை 96 முகாம்களும், நான்காவது கட்டமாக அக்டோபர் 15 முதல் 31 வரை 24  முகாம்களும் நடைபெற உள்ளன. இவை மாநகராட்சி யின் 100 வார்டுகளில் 66 இடங்களிலும், 7 நகராட்சிகளில் 50 இடங்களிலும், 66 பேரூராட்சிகளில் 102 இடங்களி லும், நகரை ஒட்டிய ஊராட்சி பகுதிகளில் 82 இடங்களி லும் நடைபெறும். இம்முகாம்களில் 1,694 களப் பணியா ளர்கள் பொதுமக்களுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள னர். வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. மருத்துவ முகாம்கள், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள், புதிய சொத்து வரி, சொத்து வரி மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட சேவைகளும் வழங் கப்படுகின்றன. இ-சேவை மையமும், ‘மே ஐ ஹெல்ப்  யு’ என்ற காவல்துறை உதவித் திட்டமும் இம்முகாமில்  செயல்படும். ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். சேலம் இதேபோன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 432 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் 168 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 264 முகாம் களும் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக, ஜூலை 15  ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை 120  முகாம்கள் நடத்தப்படவுள்ளது. நகர்ப்புறங்களில் 13  அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளைச் சார்ந்த 46 சேவைக ளும் வழங்கப்பட உள்ளது, என்றார்.