சாலையில் கூடிய ஆட்டுச்சந்தை மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரிக்கை
தருமபுரி, செப்.16- நல்லம்பள்ளியில் ஆட்டுச்சந்தை செயல்பட்டு வந்த இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதால், மாற்று இடமின்றி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் சந்தை கூடிய தால், நோயாளிகள் அவதியடைந்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இச்சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள் ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்து செல்கின்றனர். இந்நிலை யில், ஆட்டுச்சந்தை நடக்கும் இடத்தில், கடந்த சில தினங்க ளுக்கு முன், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடப்பட்டு, யாரும் உள்ளே நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப் பட்டது. அதேசமயம் ஆட்டுச்சந்தைக்கு மாற்று இடம் ஏற்ப டுத்தவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று வாகனங்க ளில் ஆடுகளை ஏற்றிவந்த விவசாயிகள் மற்றும் வியாபாரி கள், ஆடுகளை நிறுத்த இடமில்லாத நிலையில், நல்லம் பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை யில், ஆடுகளை நிறுத்தி விற்பனை செய்தனர். இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதியடைந்தனர். மேலும், போதிய இடமில்லாத நிலையில், ஆட்டுச்சந்தை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பரம்பரியமாக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், நடந்து வந்த ஆட்டுச்சந்தைக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.