tamilnadu

img

மலைப்பிரதேசங்களில் கடையின் நேரத்தை குறைத்திடுக

மலைப்பிரதேசங்களில் கடையின் நேரத்தை குறைத்திடுக

கோவை, ஆக.29– மலைப்பிரதேசங்களில் வன விலங்குகள் தாக்கும் அபாயம் இருப்பதால், இதுபோன்ற பகுதிக ளில் டாஸ்மாக் கடையின் நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க வேண் டும் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தி னர், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 10 மாவட்டங்களில் அமல் படுத்தப்பட்டுள்ள காலி மதுபாட் டில் திரும்பப் பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச் சனைகளை சரி செய்ய வேண்டும். இதனை சரி செய்யாமல் பிற மாவட் டங்களில் திட்டத்தை அமல்படுத்த கூடாது. இது தொடர்பாக நீதிமன் றத்தில் நிர்வாகம் அளித்த வாக்குறு தியின்படி, ஊழியர் சம்மேள னத்தை உள்ளடக்கிய ஒரு குழுவை உடனடியாக அமைத்து பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும்.  இஎஸ்ஐ மருத்துவத் திட்டம்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தற் போதுள்ள மருத்துவ சிகிச்சைக் கான செலவை திரும்பப் பெறும் நடைமுறைக்கு மாற்றாக, இஎஸ்ஐ (ஊழியர் அரசுக் காப்பீட்டுக் கழ கம்) திட்டத்தை அமல்படுத்த வேண் டும். இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்தப் பட்டால், ஊழியர்கள் கடன் வாங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை தவிர்க்கப்படும். ஊழியர்க ளின் குழந்தைகளுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்புகளும் கிடைக்கும். இதேபோன்று, பணிநீக்கம் செய் யப்பட்டு விசாரணைக்காக காத்தி ருக்கும் ஊழியர்களுக்கு உடனடி யாக விசாரணை நடத்தி மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். மேலும், அவர்களின் பணிநீக்க காலத்திற்கு பிழைப்பு ஊதிய சட்டத்தின் கீழ் பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ரொக்கத் திற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்த னைகளை அதிகரிக்கும் இலக்கு,  அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு எதிரானது என்றும், இது மறைமுக மாக மது விற்பனையை அதிகரிக் கும் நோக்கம் கொண்டது. எனவே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அழுத் தம் தருவதை கைவிட வேண்டும். பொது பணியிட மாற்றம்: கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு பொது பணியிட மாற்றம் நடைபெறவில்லை. இதனால் ஒரு  சில ஊழியர்கள் பல ஆண்டுகளாக ஒரே கடையில் பணிபுரிகின்றனர். எனவே, கடையின் விற்பனை மற் றும் ஊழியர்களின் பணிமூப்பின் அடிப்படையில், மூன்று ஆண்டுக ளுக்கு ஒருமுறை சுழற்சி முறை யில் பொது பணியிட மாற்றம் செய்ய  வேண்டும் என கோரப்பட்டுள் ளது. வால்பாறை, ஆனைகட்டி, தடாகம், நரசீபுரம், மேட்டுப்பாளை யம் போன்ற மலை மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் மனித-வன விலங்கு மோதல்கள் அதிகரிப்ப தால், அங்குள்ள டாஸ்மாக் கடை களின் வேலை நேரத்தை இரவு 8  மணி வரை குறைத்து, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள், மத மற் றும் சாதி அமைப்புகள் என்ற பெய ரில் சிலர் பணம் கேட்டு மிரட்டுவது அதிகரித்து வருகிறது. பணம் கொடுக்காவிட்டால், போலியான புகார்கள் ஊழியர்கள் மீது  அளிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற புகாரின் உண்மைத்தன்மையை விசாரித்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். பணம் பறிக் கும் நபர்கள்குறித்த பிரச்சனையை  ஆட்சியர், காவல் ஆணையர் மற் றும் காவல் கண்காணிப்பாளர் ஆகி யோரிடம் தெரிவித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுவரை ஊழியர்களுக்கு நிர் வாகம் சார்பில் அடையாள அட்டை  வழங்கப்படவில்லை. எனவே, ஊழியர்களின் விவரங்கள் அடங் கிய அடையாள அட்டையை உடன டியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டுள்ளது. முன்னதாக இந்த மனு அளிக் கும் இயக்கத்தில், கோயம்புத்தூர் மாவட்ட சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தின் தலைவர் ஜான் அந் தோணிராஜ், பொதுச்செயலாளர் செந்தில்பிரபு, பொருளாளர் ராம கிருஷ்ணன் மற்றும் ஊட்டி தலை வர் ஆல்துரை, செயலாளர் மகேஷ், பொருளாளர் நவீன் மற்றும் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர். வேலு சாமி ஆகியோர் பங்கேற்றனர்.