tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுவனை காப்பாற்றிய ரயில்வே போலீசார்

கோவை, ஆக.18- மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமோ ரயிலில் வந்த  2 வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய மிட்டாயை வெளியே  எடுத்து உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட் டுகள் குவிந்து வருகிறது. கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து போத்தனூர்  வரை இயக்கப்படும் மெமோ ரயிலில், மேட்டுப்பாளையத் திலிருந்து திங்களன்று மதியம் ஒரு மணியளவில் கோவை  நோக்கி வந்த ரயிலில் தேவ் ஆதிரன் (2) என்ற சிறுவன் தனது  தாயுடன் வந்துள்ளார். அப்போது கோவை அருகே வந்த போது சிறுவன் தேவ் ஆதிரன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மிட்டாய் அவனது தொண்டையில் சிக்கியது. இதையடுத்து சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மூக்கில் ரத்தம் வலிய  ஆரம்பித்தது. இதையடுத்து சிறுவனின் தாய் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே போலீ சாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ரயில்வே பாது காப்புப் படை ஆய்வாளர் சுனில் குமார் மற்றும் உதவி  துணை ஆய்வாளர் சாஜினி ஆகியோர் சிறுவன் தொண்டை யில் சிக்கியிருந்த மிட்டாயை அகற்றினர். இதையடுத்து சிறு வனை சமாதானப்படுத்திய போலீசார் கோவை வந்ததும், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல் நலம் சீராக உள்ளது எனக் கூறியதை தொடர்ந்து சிறுவன்  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். துரிதமாக செயல்பட்டு  சிறுவனின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

குறைந்தபட்ச கூலியை உறுதி செய்திடுக

உதகை, ஆக.18- தோட்டத் தொழி லாளர்களுக்கு குறைந் தபட்ச கூலியை தர வேண்டும் என நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்க (சிஐடியு) பேரவை வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட  தோட்டத் தொழிலாளர் சங்க (சிஐடியு)  பேரவை, கூடலூர் ஜான கியம்மாள் மண் டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தலைவர் சுந்த ரம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில  செயலாளர் கே.சி.கோபிகுமார் துவக்கவுரை யாற்றினார். செயலாளர் எம்.ஆர்.சுரேஷ் வேலை அறிக்கையும், பொருளாளர் பி. ரமேஷ் வரவு செலவு அறிக்கையும் முன்வைத் தனர். இதில், தோட்டத் தொழிலாளர்கள் அனை வருக்கும் இலவச வீடும் மற்றும் நிலம் அரசு  வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியை  அமுலாக்க வேண்டும். தோட்டத் தொழிலா ளர்களின் குடியிருப்பை சீர் செய்ய வேண் டும். டான் டீ மற்றும் இண்டிகோ தொழிலா ளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில், மாவட்டத் தலைவராக சி. வினோத், செயலாளராக எம்.ஏ.குஞ்சு முக மது, பொருளாளராக பி.ரமேஷ் உள்ளிட்ட  11 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். பேரவையில் சிஐடியு நிர்வாகி கள் நவீன் சந்திரன், ராஜன், வர்கீஸ், உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மணிகண்டன் நன்றி கூறினார்.