இரண்டு மாதங்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் அறிகுறிகள்
கோவை, செப்.25- கோவையில் இரண்டு மாதங்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்ட நிலையில், மாநக ராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண் காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ரேபிஸ் அறிகுறியுடன் கண்டறியப்பட்ட வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தினமும் வாகனங்களில் செல்வோரையும், தனியாகச் செல்லும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் இந்த தெருநாய் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, கோவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிஷன் ரேபிஸ் என்ற அமைப்பினர் கோவை யில் செயல்பட்டு வரும் ஹியுமன் அனி மல் சொசைட்டி என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து கோவையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரேபிஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோவை மாநகர் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் இறந்த 45 நாய்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண் டாம் கட்ட ஆய்விற்காக மாதிரிகள் பெங் களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. மேலும் ரேபிஸ் பாதிப்புடன் கண்ட றியப்பட்ட நாய்கள் இருந்த பகுதிகளில் ரிங் வேக்சினேசன் முறையில் சுமார் 287 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநக ராட்சி நிர்வாகம் தன்னார்வ அமைப்பு டன் சேர்ந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் அடிப்படையில் ரேபிஸ் பாதிப் புள்ள நாய்கள் கண்டறிப்பட்டதால் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தப் பட்டு வருவதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுற்றித்திரியும் நோய்வாய்ப் ப்பட்ட அல்லது ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் நாய்கள் குறித்து 98437 89491 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதுகுறித்து பேசிய கோவை மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாக ரன் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் ரேபிஸ் பாதிப்பு சந்தே கம் இருந்தால் அதனை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் வகையில் அன்மை யில் உதவி எண் வழங்கப்பட்டது. அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற் றது. கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் அழைத்தனர். சுமார் 300 சதுர கிலோ மீட்டர் பரப்பரப்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அழைப்புகள் அடிப்படையில் நாய்கள் மீட்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 25 நாய்களுக்கு ரேபிஸ் அறிகுறி இருந்தது. இது முதல் கட்ட பரி சோதனை முடிவில் தெரியவந்தது. இருப்பினும் இரண்டாம் கட்ட பரிசோ தனைக்காக அனுப்பி வைத்துள் ளோம். மேலும் புலியகுளம் பகுதியில் ரேபிஸ் அறிகுறி கண்டறியப்பட்ட வளர்ப்பு நாயின் உரிமையாளர் தானாக முன் வந்து எங்களிடம் தெரிவித்தார். அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி கண்காணித்து வருகிறோம். முன் கூட்டியே கண்டறிவதால் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப டுத்தியுள்ளோம். அதே போல கோவை மாநகராட்சியில் கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் கண்டறியப்பட்ட 20 ஆயிரம் நாய்களுக்கு 100 சதவீத நாய் களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளது. மற்ற மண்டலங்களில் விரைவில் தன்னார்வ அமைப்புடன் இணைந்து பணிகளை முடிக்க உள்ளோம். குறிப் பிட்ட பகுதிகளில் மட்டும் கண்டறியப்பட வில்லை, அதே போல பாதிப்பு கண்ட றியப்பட்ட இடங்களில் ரிங் வேக்சி னேஷன் போடப்பட்டது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தங்கள் பகுதியில் ரேபிஸ் பாதிப்பு சந்தேகத்து டன் நாய்கள் கண்டறியப்பட்டால் உதவி எண்ணை அழைக்கலாம். 2024-25 ஆண்டுகளில் 13 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுகளுக்கு தற்போது வரை 6 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய் யப்பட்டுள்ளது. இப்பணிகளும் தொடர்ந்து வருகிறது. மாநகராட்சி முழு வதும் 100 சதவீதம் நாய்களுக்கு தடுப் பூசி செலுத்தப்படும் இது வரை மனி தர்களுக்கு பாதிப்பு இல்லை என்றார்.