tamilnadu

img

பொதுக்கழிப்பிட செப்டிக் டேங்க் உடைந்து மனித கழிவுகள் கால்வாயில் செல்லும் அவலம்

பொதுக்கழிப்பிட செப்டிக் டேங்க் உடைந்து மனித கழிவுகள் கால்வாயில் செல்லும் அவலம்

கோவை, ஜூலை 23- உப்பிலிபாளையம் தேவேந்திரர் வீதியில் அமைந்துள்ள பொது கழிப்பிட செப்டிக் டேங்க் பழுதடைந்து, மனித கழிவுகள் அருகில் உள்ள கால் வாயில் கலந்து விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. எனவே உடனடியாக கழிப்பிடத்தை சீர மைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் கோவை மாவட்டம், சிங்கா நல்லூர் நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி வெளியிட் டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த சிங்காநல்லூர் சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், தொகுதி மேம்பாட்டு நிதியில் கோவை மாநகராட்சி, 61 ஆவது வார்டு, உப்பிலிபாளையம் தேவேந்திரர் வீதியில் முதல்முறையாக அதிநவீன பொது சுகாதார கழிப் பிடம் கட்டப்பட்டது. இந்த பொது கழிப்பிடத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந் நிலையில், இந்த பொது சுகாதார கழிப்பித்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செப்டிக் டேங்க் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. சிங்காநல்லூர் குளத்திற்கு செல்லும் சங்கனூர் கால்வாய் வழியாக பொதுக்கழிப்பிட மலக்கழிவு கள் கலந்து பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், பெரும் நோய் தொற்றும் ஏற்படுத்தி வரு கிறது. கழிப்பிடத்தின் உள்புறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. இதுதொடர்பாக கிழக்கு மண்டல ஆணையா ளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலி பர் சங்கம் சார்பில் கழிப்பிடத்தை உடனடியாக சரி  செய்து தரக்கோரி தொடர்ச்சியாக மனு அளித்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சிபிஎம் நகரக் குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கிளைச் செய லாளர் நாகேந்திரன், வாலிபர் சங்க நகர குழுத் தலைவர் ரெனித்குமார் உள்ளிட்டோர் இப்பிரச் சனை சம்பந்தமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதியன்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று கிழக்கு மண்டல ஆணையரிடம் அளித்த னர். ஆனாலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக் கப்படவில்லை. குடியிருப்புகள் அதிகமுள்ள இப் பகுதியில், மனித கழிவுகள், கால்வாயில் கலந்து செல்வதால், நோய் பரவும் அபாயமும் அதிகம் உள்ளது. எனவே உடனடியாக அந்த பொது கழிப்பி டத்தை அகற்றி புதிதாக செப்டிக் டேங்க் வசதியுடன் கூடிய நவீன பொது கழிப்பிடம் அமைத்து தர வேண் டும். இப்பிரச்சனையின் மீது உடனடி நடவ டிக்கை மேற்கொள்ளாவிட்டால், மண்டல அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்து வோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.