ஒப்பந்த பணியாளர்களை நிரந்தம் செய்யக்கோரி போராட்டம்
தருமபுரி, செப்.25- ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர் களை பணி நிரந்தம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு தரும புரி மாவட்ட ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். குறைந்தபட்ச ஊதிய அர சாணை 2 (டி) 62 நாள்: 11.10.2017 இன்படி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த வழக்கின் தீர்ப்பின்படி, நகராட்சி நிர்வாக இயக்குநரின் சுற் றறிக்கையின்படி, ஒப்பந்த அடிப் படையில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்கள், டிபிசி ஊழியர்கள், குடிநீர் பிரிவு ஊழியர், ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண் டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத் திற்கு குறைவாக ஊதியம் நிர்ண யித்த மாவட்ட ஆட்சியரின் ஊதிய உத்தரவை திரும்பப்பெற வேண் டும். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் முறையே ரூ.745, ரூ.657, ரூ.568 நாள் ஒன் றுக்கு ஊதியம் வழங்க வேண்டும். 2024 – 25 ஆம் ஆண்டிற்கான போனஸ் 8.33 சதவிகிதம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்து வரும் வருங்கால வைப்பு நிதி உரிய காலத்தில் வரவு வைத்து, யுஏஎன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நகராட்சி தூய்மைப் பணி மற்றும் இதர பிரிவு பணிகளை அவுட்சோர்சிங், தனியார்மய அரசா ணைகள் 10, 139, 152 உத்தரவை தமிழக அரசும், நகராட்சி நிர்வாக மும் ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்குமேல் பணி செய்து வரும் அனைத்துப்பிரிவு தொழிலா ளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு காலதாமமின்றி, ஓய்வூ திய பணப்பயன்களை வழங்க வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட அரூர் நக ராட்சியில் விதிகள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை சிஐ டியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று பெருந்திரள் முறை யீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஏ.சேகர் தலைமை வகித் தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டத் தலைவர் சி.காலவதி, சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் செல்வம், மாவட்ட துணைத்தலைவர் மணி வண்ணன் உட்பட திரளான தூய் மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.செங்கோ டன் பேசினார். மோட்டார் சங்க தலைவர் எம்.மாதேஸ்வரன் வாழ்த் திப் பேசினார். இந்த போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் தனபால், கவிதா, விஜயலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
