tamilnadu

img

ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு; போராட்டம்

ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு; போராட்டம்

சேலம், ஜூலை 30- வேங்கம்பட்டி ரயில்வே சுரங் கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து பொதுமக்கள் தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள வேங்கம்பட்டி பகு தியில் புதிதாக ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். சுரங்கப்பாதை அமைத்தால் இப்பகுதி முழுமையாக பாதிப்பு ஏற்படும். அத்தியாவசிய தேவை களுக்காக பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள், அனைத்துக்கட்சி யினர் புதனன்று தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இதுகுறித்து போராட்டக் காரர்கள் கூறுகையில், தமிழக அர சின் நில எடுப்பு சட்டத்தின்படி, உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் கூட்டத்தைக் கூட்டி பொது மக்களின் கருத்துக்களை கேட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும். குடி யிருப்பு பகுதிகள் அதிகம் இருப்ப தால் திட்டத்தை மாற்றுப்பாதை யில் செயல்படுத்த வேண்டும். வரு வாய்த்துறை அதிகாரிகள் இல்லா மல் நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வரு வாய்த்துறை தான் இப்பணிகளை செய்ய வேண்டும் என முறையிட்ட போது, எல்லா பணிகளையும் காவல்துறை தான் செய்யும் என மிரட்டல் விடுப்பதாக, குற்றஞ் சாட்டியுள்ளனர்.