சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு
சேலம், ஜூலை 14 - சாலையோர பாதுகாப்புச் சட் டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என் பதை வலியுறுத்தி சேலத்தில் திங்க ளன்று சிஐடியு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு சேலம் மாவட்ட சாலை யோர விற்பனையாளர்கள் சங்கத் தின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், சாலையோர வியாபா ரிகளை கணக்கெடுத்து அரசின் அடையாள அட்டை மற்றும் வியா பார சான்றிதழ் வழங்க வேண் டும். மாநகராட்சி நகராட்சி பேரூ ராட்சி மற்றும் ஊராட்சிகளில் சாலை யோர பாதுகாப்பு சட்டம் 2014 இன் படி விற்பனை கமிட்டி அமைத்திட வேண்டும். நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் இலவச தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் முன்னிருத் தப்பட்டது. சிஐடியு சேலம் மாவட்ட சாலையோர விற்பானையாளர் கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.விஜயலட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாநிலக் குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி, சங்க செய லாளர் பி. தனசேகரன் பொருளா ளர் எஸ். கார்த்திக் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், போக்குவரத் திற்கு இடையூறு செய்யாமல், விற்பனை செய்யும் வியாபாரி களை காவல்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறையினர் அச்சுறுத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் முழக் கங்களை எழுப்பினர்.
2014 ஆம் ஆண்டு “சாலையோர வியாபாரிகள் சட்டம்
சாலையோர வியாபாரிகள் என்பது நகர விற் பனைக் குழுக்களை அமைப்பதை கட்டாயமாக்கு கிறது. இந்தக் குழுக்கள் சாலையோர வியாபாரி களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் பிரதிநிதி களையும் உள்ளடக்கி செயல்படும். வியாபாரச் சான் றிதழ் வழங்குதல், வியாபாரத்தை முறைப்படுத் துதல், இடங்களை ஒதுக்குதல், வியாபாரிகளை அப் புறப்படுத்துதல் மற்றும் மாற்று இடம் வழங்குதல் போன்ற அதிகாரங்கள் இச்சட்டத்திற்கு உண்டு. சாலையோர வியாபாரிகள் சந்திக்கும் எந்தப் பிரச் சினையாக இருந்தாலும், நகர விற்பனைக் குழுவில் தான் முடிவு செய்யப்பட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வியாபாரம் செய்யும் இடத்துக்கான உரிமம் வழங்குதல் ஆகியவை இந்தச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் வியாபாரிகள் சட்டபூர்வமாக அங் கீகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்த முடியும். இந்தச் சட்டம் சாலையோர வியாபாரிகளுக்கு சமூக விரோதி களிடம் இருந்தும், அதிகாரிகளின் அத்துமீறல்களில் இருந்தும் பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வியாபாரிகள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லா மல் தங்கள் வியாபாரத்தைச் செய்ய முடியும் என் பதை உறுதிப்படுத்துகிறது. சாலையோர வியா பாரிகளின் கணக்கெடுப்பை நடத்தி, அவர்களை முறைப்படுத்தும் வழிமுறைகளைச் சட்டம் வகுத் துள்ளது. இதன் மூலம் வியாபாரிகளின் எண் ணிக்கை, அவர்கள் செயல்படும் இடங்கள் போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்படும். வியாபாரிகளின் குறைகளை நிவர்த்தி செய்வ தற்கான வழிமுறைகளும் இந்தச் சட்டத்தில் உள்ளன. நகர விற்பனைக் குழு மூலம் அல்லது பிற சட்ட பூர்வமான வழிகளில் வியாபாரிகள் தங்கள் குறை களைத் தெரிவிக்கலாம். ஒருவேளை சாலையோர வியாபாரிகளை அப்பு றப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்க ளுக்கு மாற்று இடம் வழங்குதல் அல்லது மறு வாழ்வு அளிப்பதற்கான வழிமுறைகளைச் சட்டம் வலியுறுத்துகிறது. இது வியாபாரிகளின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்தச் சட்டம், விதிகளை மீறுவோருக்கு அல்லது வியாபாரிகளைத் துன்புறுத்துவோருக்கான தண் டனைகளையும் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம், நகர்ப்புற பகுதிகளில் சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகளை அங்கீகரித்து, அவர்களை ஒரு சமூகப் பொருளாதா ரக் குழுவாக மதித்து, அவர்களின் வியாபார நடவ டிக்கைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.