tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி முதல்வர் கைது

 தருமபுரி, ஆக.24- மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி  முதல்வரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் மற்றும்  அழகாகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் தனியார் அதியமான்  மழலையர் பள்ளி மற்றும் அதியமான் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. ஏரியூரைச் சேர்ந்த, சிடுவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி யாற்றும் கண்மலர் மற்றும் அவரது கணவர் நடராஜ் ஆகி யோர், கடந்த 36 ஆண்டுகளாக இப்பள்ளிகளை நடத்தி வரு கின்றனர். இவர்களது மகனான விணு லோகேஸ்வரன் (33)  என்பவர், பள்ளியின் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி மாண விகளுக்கு விணு லோகேஸ்வரன் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதேப் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவிக்கு, பள்ளியிலும்  மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் பாலியல் தொல்லை  அளித்துள்ளார். இதையறிந்த பெற்றோர், மாணவியை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். ஆனால், விணு லோகேஸ்வரன் தொடர்ந்து போன் செய்து, மாணவியை பள்ளிக்கு வரும்படியும், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே  இல்லை எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் ஏரியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர், அரசியல் வாதிகள் துணையுடன், போலீசாருடன் இணைந்து, புகார் அளித்த பெற்றோரை மிரட்டியும், பணத்தை கொடுத்தும் கட் டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். ஆனால், இதற்கு அஞ்சா மல் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். இதையடுத்து போலீசார், மாணவி யின் செல்போனை பறிமுதல் செய்து, அதிலுள்ள புகைப் படம், வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகளை ஆதார மாகக் கொண்டு, விணு லோகேஸ்வரன் மீது போக்சோ சட்டத் தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, மேட்டூரில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து, சிறையில் அடைத்த னர்.

தெருநாய்களுக்கு ஆதரவாக பேரணி

கோவை, ஆக.24- தெருநாய்களுக்கு ஆதரவாக கோவையில் பேரணி நடை பெற்றது. நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும்  நிலையில் உச்ச நீதிமன்றம், உள்ளாட்சி நிர்வாகம் தெரு  நாய்களை பிடித்து, தடுப்பூசி செலுத்த வேண்டும்  கருத்தடை செய்து, எங்கு பிடித்தார்களோ அங்கேயே விட்டு  விட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் நாய்கள் ஆர்வலர்கள் பந்தய சாலை  பகுதியில் ஞாயிறன்று பேரணி மேற்கொண்டனர்.

விசைப்படகு போக்குவரத்து துவக்கம்

சேலம், ஆக.24- சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனியன்று மீண்டும் தொடங்கியது. சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகு தியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு  நீர்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இக்கதவணை  நீர்த்தேக்கப் பகுதியில் சேலம் மாவட்ட எல்லையான  பூலாம்பட்டி, ஈரோடு மாவட்டப் பகுதியான நெருஞ்சிப் பேட்டைக்கும் இடையே இரு மாவட்டங்களையும் இணைக் கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று  வருகிறது. இப்பகுதியில் வேறு தரைவழிப் போக்குவரத்து வசதி இல்லாததால், விசைப்படகுகள் மூலம் மட்டுமே பள்ளி,  கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், விவசாயிகள், பொது மக்கள் தினசரி இரு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்ற னர். கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் திறக்கப்பட்ட தால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, பூலாம்பட்டி பகுதியிலிருந்து இரு மாவட்டங் களையும் இணைக்கும் வகையில் செயல்பட்டு வந்த  விசைப்படகு போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்களால் கடந்த ஆக.19 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலை யில், மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், சனியன்று முதல் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.