tamilnadu

img

ரத்ததானம் செய்த நபருக்கு காலாவதியான ஜூஸ் வழங்கிய தனியார் மருத்துவமனை

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரத்ததானம் செய்த நபருக்கு காலாவதியான ஜூஸ் வழங்கிய தனியார் மருத்துவமனை கோவை, ஆக.26- கோவையில் பிரபல தனி யார் மருத்துவமனையில் ரத்த தானம் செய்த நபருக்கு காலாவதியான ஜூஸ் வழங் கப்பட்டுள்ளதால், அதிகாரி கள் உரிய விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கோவை, அவிநாசி சாலையில் உள்ள பிரபல கே.எம்.சி.ஹெச் என்ற தனியார் மருத்துவமனையில் ரத்த தானம் செய்தவருக்கு காலாவதியான ஜூஸ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாயன்று ரத்த தானம் செய்த ஒருவர், அதன் பின் அந்த நபருக்கு வழங்கப்பட்ட ஜூஸ் பெட்டியை பெற்று உள்ளார். அதனை பார்த்த போது, அந்த ஜூஸ் 12.08.2025 அன்று காலாவதியாகி 24 நாட்கள்  கடந்து இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்  கூறுகையில், நான் அந்த ஜூஸை அருந்திய பிறகு உடல் நிலைப்பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அதே மருத்துவம னையில் சிகிச்சை பெற குறைந்தபட்சம் ரூ.50,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், நான் கேள்வி எழுப்பிய போது மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வில்லை என தெரிவித்தார். இந்த சம்பவம், மருத்துவம னையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து  கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசா ரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.