தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா
சேலம், ஆக.30- சேலத்திலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65 ஆவது பட்டமளிப்பு விழா சனியன்று, கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் 5 இடங்களைப் பெற்ற 60 மாணவர்கள் உட்பட 681 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்களை வழங்கினார். இதில் கல்லூரியின் முதல்வர் கனகராஜ், கல்லூரி குழுமங்களின் தலைவர் சொ.வள்ளியப்பா, கல்லூரியின் இயக்குநர் கார்த்திகே யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
