அரசுப் பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
சேலம், ஜூலை 13- சேலத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்துவதற்கான பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் 22 நாட்கள் நடக்கும் ஆடிப் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி தமி ழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், ஆண்டு தோறும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படும். இந்நிலையில், நடப்பாண்டில் அரசுப் பொருட் காட்சி நடத்தும் வகையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திடலில், கண்காட்சி அரங்குகள் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், அரசுத்துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட அரங்குகளும், தனியார் நிறுவனங்கள் சார் பில் சுமார் 200 அரங்குகளும் அமைக்கத் திட்டமிட்டு, பணி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பொருட்காட்சி நடத் தப்பட்டு வருவதால், சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வமு டன் பொருட்காட்சிக்கு வந்து சென்றனர். தற்போதும் அதே இடத்தில் நடத்தப்படுவதால், பொருட்காட்சிக்கு மக்களி டையே வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கண்காட்சி அரங்குக்கான பணிகள் தொடங் கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் பொருட் காட்சி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
காவல் நிலைய வளாகத்தில் மண்டை ஓடு மீட்பு
சேலம், ஜூலை 13- தேவூர் பழைய காவல் நிலைய வளாகத்தில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்ததால் பொதுமக் கள் அதிர்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தேவூர் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு பல மாதங்களுக்கு முன் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த புதிய காவல் நிலையம் செயல்பட ஆரம்பித்தவுடன், பழைய காவல் நிலையத்தி லிருந்த கோப்புகள், தளவாடப் பொருள்கள், குற்ற வழக்கு கள், சாலை விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங் கள் போன்றவை இங்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்நிலை யில், சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள், சிறுவர்கள் பழைய காவல் நிலையத்திலுள்ள நாவல் மரத்தில் இருந்து கீழே விழுந்த பழங்களை எடுக்கச் சென்றனர். அப்போது, காவல் நிலைய கட்டடத்தின் பின்பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அவை குற்றவழக்கு களில் புலன்விசாரணைக்காகவும், ரசாயன பரிசோதனை களுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டவை, என்றனர்.
வணிக நிறுவனத்திலிருந்த பாம்பு மீட்பு
ஈரோடு, ஜூலை 13- ஈரோடு - பெருந்துறை சாலையில் மகாலட்சுமி ஆட்டோ ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாம்பு கண்ணில் தென்பட்டதாக அரு கிலிருந்தவர்கள் கூறினர். இந்நிலையில், ஞாயிறன்று காலை வழக்கம் போல் கடையைத் திறந்தவர் கீழே கிடந்த பேப்பரை எடுக்க குனியும் போது பாம்பின் சத்தம் கேட்டுள்ளது. சுதா ரித்துக் கொண்டு பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ் என்பவர் அப்பாம்பினை பிடித்தார். இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், 4 - 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு கணினி மேசையி லிருந்து பிடிபட்டது. அதனைக் கவனிக்காமல் அமர்ந்திருந் தால் அது வயிற்றில் கொத்தியிருக்கும். கன நொடியில் உயிரி ழப்பு ஏற்பட்டிருக்கும். வனத்துறை மூலம் காட்டிற்குள் பாம்பு விடுவிக்கப்பட்டது, என்றார்.
லிப்ட் கேட்ட மாணவன் மீது கொலைவெறி தாக்குதல்
கோவை, ஜூலை 13- லிப்ட் கேட்ட மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் மாணவனை, அடையாளம் தெரி யாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம், இச்சிபட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவன், கோவை மாவட்டம், அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்று வந்த இவர். வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் செல்லாமல், வீட் டிற்கு செல்வதற்காக அன்னூர் - கருமத்தம்பட்டி சாலைக்கு வந்துள்ளார். அப்போது, அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி இரு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்களிடம் மாணவன் லிப்ட் கேட்டு, சாமாளாபுரத் தில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். அந்த இளைஞர்களும், உதவுவதுபோல மாணவனை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால், சாமளாபுரத்தில் இறக்காமல், சோமனூர் அருகே உள்ள மதுபான கடைக்கு அழைத்துச் சென்று, மது அருந்து மாறு நிர்பந்தித்துள்ளனர். மறுத்த மாணவனை காடம்பாடி பகு தியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் வைத்து இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ள னர். முகம், காது, வாய், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த மாணவனை அங்கேயே விட்டுவிட்டு இளை ஞர்கள் தப்பிச் சென்றனர். காயமடைந்த மாணவனைப் பார்த்த பொதுமக்கள், சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை யினர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, படு காயமடைந்த மாணவனை கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். தாடை உடைந்த நிலையில், மாணவ னுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மாணவன் கருமத்தம்பட்டி சாலையில் அடையாளம் தெரியாத நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீல நிற ஹோண்டா வாக னத்தில், பள்ளி சீருடையில் மாணவன் பின்னால் அமர்ந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர் பாக சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத இளைஞர்களை தேடி வருகின்றனர்.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மாத்திரைகளை எரித்த அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம்
சேலம், ஜூலை 13- சேலத்தில் அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கு வழங்க வேண்டிய மாத்திரை களை எரித்த அங்கன்வாடி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட் டார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி, மேட்டுதெருவில் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 250க்கும் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாண வர்களின் உடல் நலனை காக்கும் வகை யில் அரசின் சார்பில் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வைட் டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜூலை 9 ஆம் தேதியன்று இந்த மாத்திரைகளை அப்பள்ளி அங்கன் வாடி ஊழியர் பிருந்தா என்பவர் எரித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகா ரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கன் வாடி ஊழியரிடம் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சுகந்தி விசா ரணை மேற்கொண்டார். அதில், எலிக ளால் சேதப்படுத்தப்பட்ட மாத்திரை களை எரித்ததாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பான அறிக்கையின் அடிப்படையில் பிருந்தாவை பணி யிடை நீக்கம் செய்து ஆட்சியர் ரா. பிருந்தாதேவி உத்தரவிட்டார். இது தவிர குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி-க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.