வருமான வரி சோதனையால் தீவனம் வருவதில் சிக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முற்றுகை
உடுமலை, செப்.24- சுகுணா புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தீவன உற்பத்தி தொழிற் சாலையில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், கோழி களுக்கு தீவனம் வருவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகே உள்ள கணபதிபாளை யம் மற்றும் வரதராஜபுரம் ஆகிய பகுதி களில் சுகுணா புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தீவன உற்பத்தி தொழிற் சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் புதனன்று 2 ஆவது நாளாக வருமான வரித்துறையி னர் சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். இதனிடையே, சோதனையின் கார ணமாக கோழிப்பண்ணைகளுக்கு தீவ னங்கள் வழங்காமல் நிறுத்தப்பட்டுள் ளதாக தெரிய வருகிறது. உடுமலைப் பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள், விவசாயிகள் தங்களது கோழிக ளுக்கு தீவனம் இல்லாமல் பாதிக்கப்பட் டுள்ளதாகக்கூறி, வரதராஜபுரத்தில் உள்ள தீவனத்தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். உடனடியாக கோழி களுக்கான தீவனங்களை வழங்க வேண்டும். கோழிகள் தீவனம் இன்றி தவிப்பதாகவும் தீவனங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாவிட்டால் கோழி கள் உயிரிழப்பு ஏற்பட்டு பாதிப்படையக் கூடும் என தெரிவித்தனர். இதையடுத்து கோழிப்பண்ணைகளுக்கு தீவனங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் கோழிப்பண்ணை உரிமை யாளர்கள், விவசாயிகள் கலைந்து சென்றனர்.