ஜனநாயக உரிமைகளை மறுக்கும் காவல்துறை
கோவை, அக்.3- ஜனநாயக உரிமைகளை மறுக் கும் விதமாக காவல்துறை வெளி யிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அனைத் துக் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மாநகர எல்லைகளுக்குள் இனி மேற்கொண்டு ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுத்தும், தெரு முனை கூட்டங்கள் நடத்தவும், அரசு தலைமை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் தர்ணா போராட்டங்கள் நடத்தவும் தடை விதித்துள்ளது. மேலும், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குரிய இடங்களையும் சுட்டிக்காட்டி, மாநகர காவல் ஆணையர் மற்றும் ஊரக காவல் கண்காணிப்பாளர் புதிய வழிகாட்டு தல் நெறிமுறைகள் கொண்ட சுற்ற றிக்கையை வெளியிட்டுள்ளனர். இது சம்பந்தமாக விவாதிப்ப தற்காக, வெள்ளியன்று, கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில், அனைத் துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப் பினர் எம்.ஆறுமுகம் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், செயற்குழு உறுப்பினர் கே. எஸ்.கனகராஜ், சிபிஎம் மாமன்றக் குழு தலைவர் வி.இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜ யகுமார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட்) மாவட்டச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கோவை குமணன், கோவை குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பொதுக் கூட்டங்கள் ஊர்வலங்கள் நடத்துவதற்கான இடத் தேர்வு வழிகாட்டுதல் அறிக் கையில் காவல்துறை சுட்டிக்காட்டி உள்ள நெறிமுறைகள் பின்பற்ற முடியாதவை. மற்றும் ஜனநாயக உரிமைகளை மறுக்கக் கூடியதா கவும் உள்ளது. குறிப்பாக மாநகர எல்லைகளுக்குள் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசு தலைமை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள், உண் ணாவிரதம் போன்ற போராட்டங் கள் நடத்தவும், தெருமுனை கூட் டங்கள் நடத்தவும் தடைகள் விதிக் கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அனைத் துக் கட்சிகளின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இது சம்பந்தமாக அனைத்து கட்சி சார்பில் காவல்துறை உயர் அதி காரிகள் மட்டத்தில் பேசி தீர்வு காண் பது என முடிவெடுக்கப்பட்டது.
 
                                    