tamilnadu

img

மனைப்பட்டா கேட்டு அமைச்சரிடம் மனு

மனைப்பட்டா கேட்டு அமைச்சரிடம் மனு

நாமக்கல், செப்.2- இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என  வலியுறுத்தி, அமைச்சரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் செவ்வாயன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சியில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த தூய்மைப்  பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் அமைச்சர் மதி வேந்தனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அம்மனுவில், தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலா கவே தூய்மைப் பணியை மேற்கொண்டு வாடகை வீட்டிலே வசித்து வருகிறோம். எனவே, எங்களின் வாழ் வாதாரம் மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வீட்டு  மனைப்பட்டா வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுகுறித்து அதிகாரியுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.