tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பழுதடைந்த தார் சாலையை  புதுப்பிக்கக்கோரி விதொச மனு

ஈரோடு, ஜூலை 18- எழுமாத்தூர் ஊராட்சியில் பழுதடைந்த சாலை யைப் புதுப்பிக்க கோரி விதொசவினர் ஆட்சியருக்கு மனு அனுப்பினர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், எழு மாத்தூர் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் வளாகம் தரைத் தளத்தில் இருந்து உயரமான இடத் தில் அமைந்துள்ளது. இவ்வளாகத்திற்கு செல்ல பல வருடங்களுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. தற் போது தார்ச்சாலை முழுவதுமாக பழுதடைந்து குண்டும் குழியுமாகியுள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வர சிரம மாக உள்ளது. எனவே பழுதடைந்த தார் சாலையை புதுப் பித்து தருமாறு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் டி.தங்கவேல் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினார்.

காட்டு யானை தாக்கி பெண் பலி

கோவை, ஜூலை 18– கோவை நரசீபுரம் அருகே காட்டு யானை தாக்கி, நீரோடையில் துணி துவைத்து கொண்டிருந்த பெண் வியாழனன்று உயிரிழந்தார். கோவை நரசீபுரம் அடுத்த சவுக்குகாடு பழங்குடி கிராமத்தை  சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி செல்வி  (23). தோட்டவேலை செய்து வந்தார். இந்த நிலையில் செல்வி வியாழனன்று துணி துவைப்பதற்காக நரசீபுரத் தில் உள்ள நீர் ஓடையில் துணி துவைத்து கொண்டிருந் தார்.  அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை திடீரென செல்வியை தாக்கி யது. இதில் கீழே விழுந்த செல்வி பலத்த காயமடைந் தார்.  அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தி னர் யானையை விரட்ட முயன்றனர். பின்னர் போளூ வாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  அங்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப்  பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து உயிருக்கு போரா டிய செல்வியை மீட்டு அருகே உள்ள மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்து வமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி லாட்டரி விற்பனை: ஒருவர்  கைது

கோபி, ஜூலை 18- தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி மற்றும் வெள்ளை தாளில் அச்சடித்த போலி லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வைத் திருந்தவர் கோபியில் வெள்ளியன்று கைது செய்யப் பட்டார்.  ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள மணி மேகலை வீதியை சேர்ந்தவர் கெளரிசங்கர். இவர் போலி  லாட்டரிகள் விற்பனை செய்து வருவதாக கோபி  காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனடிப்படை யில் காவல் உதவி ஆய்வாளர் சத்யன் தலைமையில் காவலர்கள் புதுப்பாளையம் பகுதியில் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக் கர வாகனத்தில் வந்த கெளரிசங்கரை  காவல்துறையி னர் சோதனையிட்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளும் வெள்ளை தாளில் அச்சடிக்கப்பட்ட போலி லாட்டரி சீட்டுகள் என 288 லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது  இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசா ரணை நடத்தியதில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி மற்றும் ஏற்கனவே பரிசு விழுந்த எண்களை வெள்ளை  தாளில் அச்சடித்த போலி லாட்டரி சீட்டுகளை ஆன்லைன்  மூலமாக விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண் டார். இதனையடுத்து, அவரிடமிருந்த 288 கேரளா லாட் டரி மற்றும் போலி லாட்டரி சீட்டுகளையும் அவர்  ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய பயன்படுத்திய மடிகணினி, இருசக்கர வாகனம், 2 செல்போன் உள் ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

நிபா வைரஸ் எதிரொலி: கண்காணிப்பு தீவிரம்

கோவை, ஜூலை 18– கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதி ரொலியாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோப்பனாரி சோதனைச் சாவடியில்  தமிழக சுகாதாரத்துறையினர் கண்கா ணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.  நிபா வரைஸ் பரவலை தடுக்கும் நோக் கில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கேரளம் மாநில எல்லையான  முள்ளி, கோப்பனாரி பகுதிகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுகா தாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர். அதேபோல காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களி லும் பொதுமக்களுக்கு காய்ச்சல் தொற்று  ஏற்பட்டுள்ளதா? என பரிசோதனை மேற் கொண்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து வாகனங்கள் மூலம் தமிழக எல்லைக்குள் நுழையும் நபர்கள் காய்ச்சல் பரிசோத னைக்கு பிறகு அவர்களது முகவரி மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் பெறப் பட்டு அதன் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.  இதேபோல கோவை மாவட்டம் முழு வதும் உள்ள கேரளம் எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர் கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

உதகை, ஜூலை 18– கூடலூரில் தேசிய நெடுஞ்சாலை சீர மைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதால் மக் கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்ட கக்கநல்லா வரையில் தேசிய நெடுஞ் சாலை 67 செல்கிறது. நீலகிரி மாவட்டம் கூட லூர் முதல் கக்கனல்லா வரையிலான, 18 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை, மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கூடலூர் பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்த னர். மேலும், சாலையின் நிலை குறித்து வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் அப்பகுதி மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இந்நிலையில், தில்லியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வந்து சாலையின் நிலையை பார்வையிட்டு 2027 ஆம் ஆண்டுதான் இந்த சாலை சீரமைக்கப் படும் என தெரிவித்தனர். இது கூடலூர் மக் களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கி யது. இந்நிலையில், இந்த சாலையை தற்கா லிகமாக சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை அணைய அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். பெரும் பள்ளங்களை மூட வும், பழுதான சாலையில் ஒட்டு வேலைக ளுக்கு ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணைய கோட்ட பொறியாளர் செல்வம் தெரிவித்தார். அவர் கூறும் போது, ‘கூடலூர் பகுதியில் உள்ள சாலையில் உள்ள பெரும் பள்ளங் கள் தற்போது முதற்கட்டமாக கிரவல் கொண்டு மூடும் பணி தொடங்கியுள்ளது. பெரும் பள்ளங்கள் சிமெண்ட் இண்டர்லாக் கற்களை கொண்டு தற்காலிகமாக மூடப் படும். இதற்காக ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டுள் ளது. பின்னர் பேட்ஜ் ஒர்க் செய்யப்படும். அதற்காக டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்களில் பேட்ஜ் ஒர்க்க பணிகள் தொடங் கும். 2027ல் சாலை முழுமையாக சீரமைக்கப் படும்’ என்றார்.