ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி
தருமபுரி, செப்.17- ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த தால், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து காவிரி யில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதன்படி, திங்களன்று விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, செவ்வாயன்று 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் 3 நாட்க ளுக்குப் பிறகு அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, ஒகேனக்கல் பிரதான அரு விக்குச் செல்லும் நுழைவாயில் திறக்கப் பட்டது. எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்ததால் செவ்வாயன்று ஒகேனக்கல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
