tamilnadu

img

ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு

ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு

ஈரோடு, ஜூலை 26- ஒன்றிய மோடி அரசு, ஓய்வூ திய திருத்த சட்டத்தை திரும்பப்  பெற வேண்டுமென அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாடு வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஈரோடு  மாவட்ட 5 ஆவது மாநாடு, வரு வாய்த்துறை அலுவலர் சங்க கட்டடத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட் டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், இணைச் செயலா ளர் என்.மணிபாரதி வரவேற்றார். அரசு ஊழி யர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.ராஜ் குமார் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வ.பன்னீர்செலவம் வேலை அறிக் கையும், எஸ்.பாலசுப்பிரமணியன் வரவு-செலவு அறிக்கையும் சமர்பித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ரமேஷ் வாழ்த்தி பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலை வர் த.குப்பன் மூத்த உறுப்பினர்களை கௌர வித்து சிறப்புரையாற்றினார்.  இதில், அரசு ஊழியர், ஓய்வூதியர்க ளுக்கு எதிரான ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை  ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஈரோடு ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டத் தலைவராக வ.பன்னீர்செல்வம், செயலாள ராக நா.மணிபாரதி, பொருளாளராக எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருங்கிணைந்த பட்டுவாடா மையத்தை ரத்து செய்ய வேண் டும் என வலியுறுத்தி, சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு வியாழனன்று தபால்காரர்கள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் நவீன்குமார், ஜெயந்தன், மோகன், துரைமுருகன், தலைவர் ஜெய பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.