tamilnadu

img

ஓய்வூதியர் சங்கங்கள் மனித சங்கிலி இயக்கம்

ஓய்வூதியர் சங்கங்கள் மனித சங்கிலி இயக்கம்

ஓய்வூதிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

சேலம், ஜூலை 25- ஓய்வூதிய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வூதியர் சங்கங் களின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளியன்று மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய அரசு ஓய்வூதியர்களின் ஓய்வூதிய பலன்களை பறிக்கும் வகை யில் நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று சட்டம் நிறைவேற் றப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், இச்சட்டத்தை திருப்பப்பெற வேண் டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதி யர் சங்கங்களில் தேசிய ஒருங்கிணைப் புக்குழு சார்பில் வெள்ளியன்று மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.  சேலம் தலைமை அஞ்சலகம் முதல்  அண்ணா சிலை வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. கூட்டமைப்பு  நிர்வாகி கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலை வர் சுப்பிரமணியம், பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் நல அமைப்பின் தமிழ்மணி, பல ராமன், சின்னசாமி, அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் நேதாஜி சுபாஷ், பிஎப் ஓய்வூ தியர் சங்கத்தின் சாத்தகி, ராமன், ரயில்வே ஓய்வூதியர் சங்கத்தின் திருப் பதி, மாநில அரசு ஊழியர் சங்க நிர்வாகி அருள்மொழி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற மனித சங்கிலி  இயக்கத்திற்கு, ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிசாமி, செயலாளர் எம்.பெருமாள், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, போக்கு வரத்து கழக ஓய்வூதியர் நல அமைப் பின் மாநில துணைத்தலைவர் கே.குப்பு சாமி, அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் பி.சுப்பிரமணி, எல்ஐசி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கள் ஏ.மாதேஸ்வரன், சோமசுந்தரம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநி லத் தலைவர்கள் ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.கே. ராமசாமி தலைமை வகித்தார். ஓய்வூ தியர் சங்க நிர்வாகி ஏ.குப்புசாமி துவக்க வுரையாற்றினார். இதில் ஒருங்கிணைப் புக்குழு செயலாளர் கே.எஸ்.இளங் கோவன் மற்றும் நிர்வாகிகள் எம்.காளி யப்பன், அழகிரிசாமி, அன்பழகன், டி. மணி உட்பட பலர் கலந்து கொண்ட னர். கோவை கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு நடைபெற்ற போராட் டத்தில், ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு தலைவர் என்.அரங்க நாதன், கன்வீனர் கருணாநிதி, பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.குடியரசு மற்றும் தனுஷ் கோடி உள்ளிட்ட சகோதர சங்கங்க ளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்ற னர்.