பூட்டி கிடக்கும் கழிவறையால் பயணிகள் அவதி
தருமபுரி, ஜூலை 10- தருமபுரி பேருந்து நிலை யத்திலுள்ள இலவச கழிவ றையை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டும், கடந்த 4 மாதங்களாக பூட்டி கிடப்ப தால் பயணிகள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். தருமபுரி நகராட்சியில் புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையம் அருகருகே செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின் றன. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் தினந்தோறும் வந்துசெல்கின்றனர். இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம்பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சதீஷ், இலவச கழிவறை அதிக துற்நாற்றம் வீசு வதால் அதனை சீரமைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து நகராட்சி சார்பில் சீரமைப்பு பணிக்காக இல வச கழிவறை பூட்டி வைக்கப்பட்டது. 4 மாதங்களைக் கடந்தும் சீரமைப்பு பணி முடிவடையாமல், தற்போது வரை கழிவறை பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாத அதிகாரிகள், தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவையும் காற்றில் பறக்க விட்டுள்ளனர் என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ள னர். எனவே, பூட்டி கிடக்கும் இலவச கழிவறையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.