புதிய அஞ்சல் அலுவலகம் திறப்பு
ஈரோடு, ஆக.18- ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் கீழ், சோலார் பகுதியில் புதிய அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது. ஈரோடு, பவானி, கோபி ஆகிய மூன்று தலைமை அஞ்சல கங்கள் உட்பட 317 அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இந்நிலையில் பொதுமக்கள் தங்களின் தேவைக் காக சோலார் பகுதியில் புதிய அஞ்சல் நிலையம் கேட்டு அஞ்சல் துறையிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து அஞ்சல் துறை சார்பில் சோலார் பகுதியில் புதிய அஞ்சல் நிலையம் துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வந்தது. இந்நிலையில், திங்களன்று சோலார் துணை அஞ்சலகம் ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை கண் காணிப்பாளர் கே.கோபாலன் முன்னிலையில், மேற்கு மண் டல அஞ்சல்துறை இயக்குனர் அகில் ஆர்.நாயர் திறந்து வைத்தார். சோலார் அஞ்சல் அலுவலகம் மூலம் அஞ்சல் தலை, விரைவு தபால், பார்சல் சேவை, மணியார்டர், அஞ்ச லக சிறுசேமிப்பு திட்டம் தொடர்பான சேவைகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகள் போன்றவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.