சாலை விபத்து ஒருவர் பலி
சேலம், செப்.30- சீலநாயக்கன்பட்டி நெடுஞ் சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு லாரி அடுத்த டுத்து நான்கு வாகனங்கள் மீது மோதிய கோர விபத் தில் ஒருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும், மூவர் படுகாயம டைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், சேலத்திலிருந்து பொருட் களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரியில் புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார். ஓட்டுநர் போதையில் இருந் ததாகக் கூறப்படும் நிலை யில், அவர் லாரியை அதி வேகத்தில் இயக்கி வந்துள் ளார். சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில், ராயல் என்ஃபீல்டு புல்லட் இரு சக்கர வாகனம் மீது மோதி யது. இந்த விபத்தில், சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் தூக்கி வீசப்பட்டு, தலை நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார். அதன் தொடர்ச்சியாக, அதே லாரி மேலும் ஒரு மினி லாரி உட் பட நான்கு வாகனங்கள் மீது மோதியது. மினி லாரி யில் இருந்த குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறியதால், அந்தப் பகுதியில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த மூன்று பேருக்கு அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னதானப் பட்டி காவல் துறையினர் உட னடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவ ரத்தை சீர் செய்யும் பணி யில் ஈடுபட்டனர். இந்நிலை யில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விக்ரமை பொது மக்கள் தாக்க முயன்றனர். இதனால், போலீசார் அவரை மீட்டு, அருகிலுள்ள காவல் சோதனைச் சாவடியில் வைத்து பாதுகாப்பாக வைத் தனர். போக்குவரத்து பாதிக் கப்பட்டதால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.சேலம், செப்.30- சீலநாயக்கன்பட்டி நெடுஞ் சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு லாரி அடுத்த டுத்து நான்கு வாகனங்கள் மீது மோதிய கோர விபத் தில் ஒருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும், மூவர் படுகாயம டைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், சேலத்திலிருந்து பொருட் களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரியில் புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார். ஓட்டுநர் போதையில் இருந் ததாகக் கூறப்படும் நிலை யில், அவர் லாரியை அதி வேகத்தில் இயக்கி வந்துள் ளார். சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில், ராயல் என்ஃபீல்டு புல்லட் இரு சக்கர வாகனம் மீது மோதி யது. இந்த விபத்தில், சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் தூக்கி வீசப்பட்டு, தலை நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார். அதன் தொடர்ச்சியாக, அதே லாரி மேலும் ஒரு மினி லாரி உட் பட நான்கு வாகனங்கள் மீது மோதியது. மினி லாரி யில் இருந்த குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறியதால், அந்தப் பகுதியில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த மூன்று பேருக்கு அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னதானப் பட்டி காவல் துறையினர் உட னடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவ ரத்தை சீர் செய்யும் பணி யில் ஈடுபட்டனர். இந்நிலை யில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விக்ரமை பொது மக்கள் தாக்க முயன்றனர். இதனால், போலீசார் அவரை மீட்டு, அருகிலுள்ள காவல் சோதனைச் சாவடியில் வைத்து பாதுகாப்பாக வைத் தனர். போக்குவரத்து பாதிக் கப்பட்டதால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.