tamilnadu

சிறுமுகையில் புதிய கைத்தறிப் பூங்கா அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார்

சிறுமுகையில் புதிய கைத்தறிப் பூங்கா அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம், அக்.8- சிறுமுகையில் ரூபாய் 1.12 கோடியில் புதிய கைத்தறிப்  பூங்காவை அமைச்சர் ஆர்.காந்தி புதனன்று துவக்கி வைத் தார். கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை  பகுதி, அதன் கைத்தறி பட்டு நெசவுக்கு இந்திய அளவில்  புகழ் பெற்றது. இங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி  நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெசவாளர்களின் நலன் கருதி, சிறிய அளவி லான கைத்தறிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற் கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது ரூபாய் 1.12 கோடி செலவில், ஒரே இடத்தில் ஐம்பது கைத்தறிகளைக்  கொண்ட புதிய கைத்தறிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கைத்தறிப் பூங்காவை, தமிழக கைத்தறி மற் றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நீலகிரி தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் துவக்கி  வைத்தனர். பின்னர், பூங்காவினுள் புதிதாக நிறுவப்பட்டுள்ள  கைத்தறிகள் மற்றும் கைத்தறிப் பட்டு ரகங்களைப் பார்வை யிட்ட அமைச்சர், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச் சர் ஆர். காந்தி, “கைத்தறிப் பொருட்களின் தரத்தை மேம்படுத் தவும், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் தமிழகத்தில் ரூபாய் 20  கோடி செலவில் ஆண்டுதோறும் சிறிய அளவிலான 10 புதிய  கைத்தறிப் பூங்காக்களை அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஏற்கனவே 6 இடங்களில் இது போன்ற கைத் தறிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற் போது சிறுமுகையில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கைத் தறிப் பூங்கா மூலம் இப்பகுதி நெசவாளர்கள் நாளொன்றுக்கு ரூபாய் 800 வீதம் மாதம் ரூபாய் 20 ஆயிரம்  வரை ஈட்ட முடியும். விரைவில் இங்கு மேலும் கூடுதலாக ஐம்பது கைத்தறிகள் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணி களும் நடைபெற்று வருகின்றன” என்றார். இவ்விழாவில் தமிழக கைத்தறி மற்றும் கதர்த் துறை அரசுச் செயலாளர் அமுதவல்லி, கைத்தறித் துறை இயக்கு நர் மகேஸ்வரி உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்ட னர்.