tamilnadu

img

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் பட்டியலில் பெயர்?

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் பட்டியலில் பெயர்?

மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

கோவை, ஆக.21- ‘இந்தியா’ கூட்டணி சார்பில் குடி யரசு துணைத்தலைவர் வேட்பாளர்  பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றது குறித்து, இஸ்ரோ முன் னாள் தலைவர் மயில்சாமி  அண்ணாதுரை விளக்கமளித்துள் ளார். கோவை மாவட்டம், சூலூர் பகுதி யில் உள்ள கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில் (தனியார்) இளநிலை மற்றும் முதுகலை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டார்.  இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், தற்பொழுதுள்ள மாணவர்களுக்கு பொறியியல் துறையில் அதிக வாய்ப்புகள் பெருகி  வருகிறது. ஐடி துறையை மாணவர் கள் பலரும் விரும்பினாலும், மெக் கானிக்கல் போன்ற துறைகளையும் பல்வேறு மாணவர்கள் எடுத்து படிக் கின்றனர். ஏஐ உள்ளிட்ட துறைகளை  நோக்கி தற்போது சென்று கொண்டி ருப்பதாக தெரிவித்த அவர், அதேசம யம் அத்துறையை உயர்வுபடுத்தப் போகிறவர்கள் பொறியியல் மாண வர்கள் என குறிப்பிட்டார். குலசேக ரப்பட்டினத்தில் அமைய உள்ள செயற்கைக்கோள் ஏவு தளம், செமி கண்டக்டர் ஆய்வகங்கள் ஆகியவை களும் படிப்பதற்கு இருக்கிறது. மாற்று எரிசக்தி ஆகியவற்றிகான தேவைகளும் இருக்கிறது. பாதுகாப்பு துறையில் ட்ரோன், கண்காணிப்பு, தளவாடங்கள் போன்ற பல்வேறு தேவைகள் இருப் பதாகவும், மாணவர்கள் படைகளில்  சேராவிட்டாலும் இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் விண்வெளி, விவ சாயத்திலும் பல்வேறு கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டில் பொறியியல் மாண வர்களின் எண்ணிக்கையை பார்க் கும் போது, அமெரிக்காவில் பொறியி யலாளர்களை உருவாக்கும் அள விற்கு தமிழ்நாட்டில் கல்லூரிகள் இருக்கிறது. ஆனால், அந்தத் தரத் திற்கு நம்முடைய மாணவர்கள் வர வேண்டும். N1 சூப்பர் ஹெவி  ராக்கெட் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், மனிதனை நில வுக்கு அழைத்துச் சென்று மீண்டும்  அழைத்து வருவது, இந்தியாவிற் கான சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவுவதற்கான கட்டு மானங்களை கொண்டு செல்வது போன்ற வகையில் இந்த ராக்கெட்  மிகவும் தேவையான ஒன்றாக இருக் கும். மேலும், பெரிய கலன்களை தக்க வைக்க வேண்டிய சூழலும் தற் பொழுது ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயர்  பரிந்துரை பட்டியலில் அவரது பெய ரும் இருந்தது குறித்தான கேள் விக்கு, ஏதாவது பொறுப்பு கொடுக் கப்பட்டால் அதனை தட்டிக் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற ஒரு பொறுப்பை அனைவ ரும் சேர்ந்து கொடுத்தால் சிறப்பாக  இருக்கும் என்று அப்துல் கலாம் கூறி யுள்ளார். என்னுடைய பெயரையும்  பரிசீலித்தார்கள் என்பதில் மகிழ்ச்சி.  அதே சமயம் நம்மூரை சேர்ந்தவ ருடன் போட்டி ஏற்பட வேண்டாம்  என்பதிலும் மகிழ்ச்சி என தெரிவித் தார்.