சர்வதேச தூதர்களாக நாமக்கல் மாவட்ட மாணவர்கள் தேர்வு
ஆட்சியர் பெருமிதம் நாமக்கல், ஆக.28- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட் டத்தில், சர்வதேச தூதர்களாக நாமக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பெரு மிதத்துடன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தில், உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்து பேசுகையில், உயர் கல்வியில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 88% மாணவர்களும், 2023-24 ஆம் கல்வியாண்டில் 94% மாணவர்களும் சேர்க்கை பெற்று கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். 2023-24 ஆம் கல்வியாண்டில் 471 மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் தொழில் சார்ந்த படிப்பு களில் சேர்ந்துள்ளனர். 2024-25 ஆம் கல்வியாண்டில் 9,470 மாணவ, மாணவி களில் 8,727 மாணவர்கள் தற்பொழுது உயர்கல்வி சேர்க்கை பெற்றுள்ளனர். இம்மாணவர்களில் 445 மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். 45 மாணவர்கள் இந்திய முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அரசு நிதி உதவியுடன் பயின்று வருகின்றனர். ஐக் கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பால் அங்கீகரிக்கப் பட்ட நிலையான வளர்ச்சி கவுன்சில் சார் பில் ஐந்தாவது சர்வதேச இளைஞர் மன்ற மாநாடு தாய்லாந்தில் ஆக.21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட 62 நாடுகளில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இம் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 8 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்கள், பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இம்மாணவர்கள் தமிழ்நாட்டில் சிறந்த செயல்பாடுகளை ஒரு நிமிட வீடியோ வாகவும் சமர்ப்பித்தனர். இதில் பள்ளிக் கல்வி துறையால் தேர்வு செய்யப்பட்ட தலா 3 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிகள் சார்பில் பாங்காங் அழைத்துச் செல்லப்பட்ட னர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து கீரம் பூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு பயிலும் ஒய்.எஸ்.யாழினி மற்றும் குமாரபாளையம் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர் எம்.கமலேஷ் ஆகியோர், ஐக் கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP - United Nations development program) மூலம் சர்வதேச அள வில் பிராண்டு தூதர்களாகவும் (Brand ambassadors) அங்கீகரிக்கப்பட்டுள் ளனர், என்றார்.