tamilnadu

img

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்களை சோதனை செய்ய வேண்டுமாம்!

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்களை சோதனை செய்ய வேண்டுமாம்!

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக சர்ச்சை பேச்சு: ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு

பாட்னா பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தலை மை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெற்றது.  இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பீகார் பாஜக தலைவர் திலீப்  ஜெய்ஸ்வால் பேசுகையில், “சட்டமன்றத் தேர்தலில் போது புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் வாக்காளர் அட்டை களில் உள்ள புகைப்படத்தை தேர்தல் ஆணையம் பொருத்திப் பார்த்து சோதனையிட வேண்டும். மோசடி வாக்குகளைத் தடுக்க கட்டாயம் இந்த சோதனை செய் யப்பட வேண்டும். தேவைப் பட்டால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யலாம்” என அவர் சர்ச்சைக் குரிய வகையில் கோரிக்கை விடுத்தார். கண்டனம் திலீப் ஜெய்ஸ்வாலின் இந்த கோரிக்கைக்கு “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தன.  பாஜகவின் அடாவடி பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து “இந்தியா” கூட்டணி சார்பாக ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி., யுமான அபய் குஷ்வாஹா அனை த்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுகை யில்,“புர்கா தொடர்பான பாஜக வின் இந்த அடாவடி கோரிக்கை அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே மாநிலத்தில் வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற் கொண்டு சமீபத்திய புகைப் படத்துடன் வாக்காளர் அட்டைகள் வழங்கியுள்ளது. இதுவே ஒரு சோதனை தான். அதனால் புர்கா அணிந்த பெண்களை அட்டையில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை” என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.