tamilnadu

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாதர் சங்கம் ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாதர் சங்கம் ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு

ஈரோடு, செப்.15- மாதர் சங்க மாவட்ட மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி அடிப்படை வசதிகளை நிறை வேற்றக்கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தின் தலைவர்கள் திங்களன்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட  14 ஆவது மாநாடு கடந்த அக்டோ பர் 7-ஆம் தேதி சித்தோட்டில் நடை பெற்றது. இம்மாநாட்டில், பல்வேறு  முக்கியத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில், ஈரோடு வட் டம், இராயபாளையம், ஏரிமேடு, மற்றும் அந்தியூர் வட்டம், பாலக் குட்டை ஆகிய பகுதிகளில் பள்ளி  மாணவ, மாணவிகள் சிரமமின்றி சென்றுவர கூடுதல் பேருந்து வசதி கள் செய்து தர வேண்டும். சிந்தன்குட்டை மற்றும் நம்பி யூர் பாரதிநகர் பகுதிகளில் அங்கன் வாடி மையங்களுக்குக் கூடுதல்  கட்டிடங்கள், கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம்பாளையத்தில் சமு தாயக் கூடம் அமைக்க வேண்டும்.  பெருந்துறை, பணிக்கம்பாளையம் பகுதியில் முறையான சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும். அந்தி யூர், கோபி, பவானிசாகர் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நிய மிக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு கள் மேம்படுத்தப்பட வேண்டும்.  கடம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடி யாக அகற்ற வேண்டும். மேலும், அப்பகுதியில் பெண்களுக்கு இல வசப் பேருந்து பயண வசதி வழங் கப்பட வேண்டும் உள்ளிட்ட அடிப் படை பிரச்சனைகளின் மீது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண்டும்  என மனு அளித்தனர். முன்னதாக இந்த மனு அளிக்கும் நிகழ்வில், மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜெ.அருந்ததி, துணைத்  தலைவர் பா.லலிதா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வீரம்மாள், மாதேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சம் பூர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.