தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை ஞாயிறன்று விவசாய பிரதிநிதிகள் சந்தித்து, தெரு நாய்களால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்க கோரிக்கை வைத்தனர். நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.