மத்திய தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவாக வெகுமக்கள் அமைப்புகள் ஐந்து ஊர்களில் மறியல்
திருப்பூர், ஜூலை 9 – மக்கள் விரோத கொள்கைகளை அமலாக்கும் மோடி அரசுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டத் தில் ஐந்து ஊர்களில் விவசாய மற்றும் வெகுமக்கள் அமைப்புகள் மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற் றது. திருப்பூர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவ லகத்தை முற்றுகையிடும் போராட் டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.அருள் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பானு மதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டக் குழு உறுப்பினர் கே.பிரகாஷ் உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாதர், வாலிபர், மாண வர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என 34 பெண்கள் உட்பட 84 பேர் கைது செய்யப் பட்டனர். அவிநாசி அவிநாசி - சேவூர் சாலை, இந்தியன் வங்கி அருகில், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் சண்மு கம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். இதில் விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சந் தோஷ், மாணவர் சங்க நிர்வாகி மகேந் திரன், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் சித்ரா, செயலாளர் கௌரிமணி உள்பட மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட் டோரை காவல் துறையினர் கைது செய்தனர். பள்ளபாளையம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் ஒன்றியத் தலைவர் ராஜகோபால் தலைமையில் பள்ளபாளையம் கனரா வங்கியை முற்றுகையிட்டனர். உடு மலை மூணார் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் பாலதண்டபாணி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் அருண்பிரகாஷ், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ரங்கராஜ், ஒன்றியச் செயலா ளர் கனகராஜ், வாலிபர் சங்க நிர்வாகி கள் தமிழ்தென்றல், ராமசாமி, மாதர் சங் கத்தின் கல்பனா, மாணவர் சங்கத்தின் அறவாழி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 68 பெண்கள் உள் பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். மடத்துக்குளம்: அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் செயலாளர் மாசாணம் தலைமையில் மடத்துக்குளம் தபால் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தணன், விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பஞ்சலிங் கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், சிஐடியு சங்கத்தின் பன்னீர் செல்வம், எம்.எம்.வீரப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர். முன்னதாக அமைதியான முறை யில் நடைபெற்ற போராட்டத்தை சீர்கு லைக்கும் வகையில் மடத்துகுளம் காவல்நிலைய ஆய்வாளர் அருண் நடத்து கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 130 பெண்கள் உள்ளிட்ட 170 பேர் கைது செய்யப்பட்டனர். பொங்கலூர் பொங்கலூரில் கோவை திருச்சி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பிருந்து மறியல் ஊர்வலம் தொடங்கி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி தலைமை வகித்தார். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முருகேசன், மாணவர் சங்க மாவட்டத்தலைவர் விமல்ராஜ், விவசா யிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.பாலன், லோகநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.சிவசாமி, ஜி. சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். இதில் பெண்கள் 25 பேர் உள்பட மொத் தம் 70 பேர் கலந்து கொண்டனர்.