tamilnadu

img

இலகுரக, கனரக லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள்

இலகுரக, கனரக லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள்

ஒன்றிய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி., மனு

நாமக்கல், செப்.11- இலகுரக, கனரக லாரி தொழி லாளர்களின் வாழ்வாதாரப் பிரச்ச னைகளை தீர்க்க வேண்டும் என  வலியுறுத்தி, ஒன்றிய அமைச்சரி டம் நாமக்கல் நாடாளுமன்ற உறுப் பினர் மாதேஸ்வரன் மனு அளித் தார். இலகுரக, கனரக, எல்பிஜி மற் றும் ரிக் வாகனங்கள் நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் உள் ளன. இந்திய அளவில் எந்த தொழிற் சாலையில் உற்பத்தியாகும் பொருட் களையும் கொண்டு செல்லக்கூ டிய திறன் படைத்த ட்ரெய்லர் லாரி கள் அதிகம் இங்கு தான் உள்ளது. அந்த தொழில் நாளடைவில் சரிவை சந்தித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் லோடுகள் இல்லா தது தான். இதுபோன்ற பிரச்சனை களை களைய இத்தொழிலை சார்ந்து நேரடியாகவும், மறைமுக மாகவும் பல்லாயிரகணக்கான குடும் பங்களின் வாழ்வாதாரத்தை காக்க பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றித்தரக்கோரி, ஒன்றிய எஃகு மற்றும் கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமியை நேரில் சந்தித்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதா வது, பெல் நிறுவனத்தில் ஒப்பந் தம் கோரும்பொழுது மண்டலம் வாரியாக இல்லாமல் பழைய முறைப்படி மாநிலங்கள் வாரியாக வழங்கக்கூடிய வாடகைக்கட்ட ணத்தை கிலோ மீட்டர் தொலைவு (1 – 500, 501 – 1000, 1001 வரை மேல்)  கணக்கிட்டு வழங்க வேண்டும். நாமக்கல் ட்ரெய்லர் லாரி சங்கத் தின் மூலமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக 70% முதல் 80% வரை  சரக்குகளை கையாண்டு பெல் நிறு வனத்திற்கு நல்ல முறையில்  கையாண்டு வருகிறது. அதை கருத் திற் கொண்டு வரும் ஆண்டுகளி லும் சரக்குகளை கையாள ஏதுவாக  பணிகள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்க ஆவண செய்ய வேண்டும். ஒப்பந்தம் எடுக்கும் பொழுது  இணைய வழியில் திறந்த வழி  ஒப்பந்தமாக அமைக்க வேண்டும். இணைய வழியில் ஒப்பந்தம் கோரும் பொழுது லாரி தொழிலில் உள்ளவர்களும் ஒப்பந்தம் கோர முடியும். லாரிகளுக்கு போடப்படு கின்ற ஆன்லைன் வழக்கு களுக்கு நேரம், தேதி, வண்டி புகைப்படம் தெளிவாக வழங்கும் பட்சத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ஏற் படுகின்ற இணையவழி வழக்கு (online case) பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெல் நிறுவனத்தி லிருந்து லோடு ஏற்றிச்செல்லும் வாகனம் லோடு இறக்கும் இடத் தில் 24 மணி நேரத்திற்குள் இறக்கி விட வேண்டும். தவறும் பட்சத்தில்  ஒரு நாளைக்கு வண்டிக்கு ஹால் டிங் வாடகை கட்டணமாக ரூ.4000 வழங்க வேண்டும். லோடு கொண்டு  செல்லும் பொழுது லாரிகளுக்கு வழங்கப்படுகின்ற வாடகைக் கட்ட ணத்தில் சுங்கக்கட்டணமும், இணையவழி வழக்கு (online case) கட்டணமும் இணைக்க வேண்டும். லாரிகள் விபத்தில் சிக் கும் பொழுது தவறு எந்த வண்டி யின் மீதுள்ளதோ அந்த வண்டியின் மீது தான் அபராதம் விதிக்க வேண் டும். பெரிய வண்டியின் மீது அப ராதம் விதிப்பதை தடுக்க வேண் டும். விபத்தில் சிக்கும் லாரி ஓட்டுநர் இறக்கும் பட்சத்தில் அவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம்  வழங்க வேண்டும். ட்ரெய்லர் லாரி கள் மல்டி ஆக்சில் என்ற முறையை  மாற்றி பழைய முறையிலேயே குறிப்பிட வேண்டும். வாகனங்கள் விபத்தில் சிக்கும் பொழுது குறிப் பிட்ட வாகனங்கள் நிறுவனங்களில் மட்டுமே வண்டியை தயார் செய்ய முடியும். அப்படி தயார் செய்ய  கொண்டு வருகின்ற இழுவை வாக னங்களுக்கு பயணத்தொகையாக உள்ள ரூ2500யை உயர்த்தி ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.ஒன்றரை லட்சம் வரை வழங்க வேண்டும். விபத்தில் சிக்கும் லாரிகள் எந்த மாநிலத்தில் விபத்து ஏற்பட்டா லும் ஆதார் அட்டையை அடிப்ப டையாக கொண்டு வழக்குகளை முடிக்க வேண்டும். வெளி மாநிலங் களில் உள்ளூர் ஜாமீன் கேட்கப்படு தல் என்ற நிலையை மாற்ற வேண் டும். பீகார், ஒடிசா போன்ற மாநி லங்களில் கண்டெய்னர் வண்டிக ளுடைய உயரம் தொடர்பாக பல் வேறு குளறுபடிகள் ஏற்படுகின் றது. ஒன்றிய அரசின் வழிகாட்டு தல்களை பின்பற்ற வேண்டும். பெட் ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை  ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.