tamilnadu

img

இலக்கிய நிகழ்வுக் கூட்டம்

இலக்கிய நிகழ்வுக் கூட்டம்

உடுமலை, செப்.14- உடுமலை இலக்கியக் களத்தின் இலக்கிய நிகழ்வுக் கூட்டம் சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை இலக்கியக் களத்தின் 27  ஆவது இலக்கிய நிகழ்வுக் கூட்டம், மீனாட்சி திருமண மண்ட பத்தில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவரும், அகில  இந்திய அறிவியல் கூட்டமைப்பின் நிர்வாகியுமான மோகனா  தலைமை வகித்தார். கவிஞர் இளையவன் சிவா வரவேற்றார்.  எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ‘மூன்று கேள்விகள்’ என்னும் சிறுகதை குறித்து எம்.சாகிதா பானுவும், சாகித்ய  அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் ‘நாக்கு’ என்னும் சிறுகதை குறித்து உதவி பேராசிரியர் இரா.பவித்ரா  ஆகியோர் பேசினர். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ரா. ராஜேந்திரன், பக்தவச்சல பாரதியின் ‘தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்’ என்னும் நூலை அறிமுகப்படுத்தி மதிப்புரை யாற்றினார். இக்கூட்டத்தில் விவசாய பாரதி, அரசு கல்லூரி  பேராசிரியர் வேல்மணி, ஆசிரியர் செல்லத்துரை, சோலை  மாயவன் ஆசிரியர் முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.