tamilnadu

img

குழு காப்பீட்டு வயது வரம்பை நீக்க எல்ஐசி முகவர்கள் சங்க மாநாடு கோரிக்கை

குழு காப்பீட்டு வயது வரம்பை நீக்க  எல்ஐசி முகவர்கள் சங்க மாநாடு கோரிக்கை

திருப்பூர், செப்.21- குழு காப்பீட்டு வயது வரம்பை நீக்க வேண்டும் என எல்ஐசி முகவர்கள் சங்க  மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்க திருப்பூர் கிளையின் 12 ஆவது மாநாடு சனியன்று திருப்பூர் சிஐடியு மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் பழனி தலைமையில் நடை பெற்ற மாநாட்டினை கோட்டச் செயலாளர் கோவர்தன் துவக்கி வைத்தார். மாநிலச் செய லாளர் குமார், கோட்டத் தலைவர் எஸ்.கே. பிரேம்குமார் ஆகியோர் அமைப்பின் செயல் பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். கிளைச்  செயலாளர் மாலதி, பொருளாளர் ஆனந்த் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இம்மாநாட்டில், முகவர்களுக்கான கமி ஷன் விதியை மாற்ற வேண்டும், குழுக்காப் பீட்டு வயது வரம்பை நீக்க வேண்டும், பெட் ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. கிளைத் தலைவராக தாமோதரன், கிளைச் செயலாளராக ராஜு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் நிறை வுரையாற்றினார். மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் சித்ரா நன்றி கூறினார்.