குமாரபாளையமா? கொமாரபாளையமா? கவுன்சிலர்கள் கேள்வி
நாமக்கல், ஆக.30- குமாரபாளையம் நகராட்சி கூட் டத்தில் கவுன்சிலர்கள் முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக ளால், நகர்மன்றக் கூட்டத்தில் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் நகராட்சி அவசரக் கூட் டம், நகர்மன்றத் தலைவர் விஜய் கண்ணன் தலைமையில் சனியன்று நடைபெற்றது. புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள் பேசுகையில், தங்களது வார்டுக ளில் பல வேலைகள் நிலுவையில் உள்ளன. இன்னும் பணிகள் துவங் கப்படவில்லை. அனுமதி வழங்கி எட்டு மாதங்களான நிலையில், பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. மேலும், நாங்கள் அழைப்பது குமாரபா ளையம். ஆனால், அரசு சார்பில் உள்ள ஆவணங்கள் எல்லாம் கொமாரபாளையம் என உள்ளது. இதை அனைவரும் எளிதில் கையா ளும் வகையில், திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறைகள் சுத்தம் செய்ய என மேஸ்திரியை அழைத்தால் கூட வருவதில்லை. அனைத்து வார்டி லும் கவுன்சிலர்களிடம், தின மும்கை யொப்பம் பெற வேண்டும். நகராட்சி பகுதியில் தெருநாய்க ளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். நகராட்சி பள்ளி கழிவறை களை சீரமைக்க வேண்டும், என்ற னர். இதைத்தொடர்ந்து, நகர்மன் றத் தலைவர் பேசுகையில், நக ராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கள் ஆங்காங்கே, சுகாதாரத்துறை பணியாளர்கள் தீ வைத்து எரித்து வருவதாக புகார் வருகிறது. இத னால் பலரும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். இதனை தடுக்க வேண் டும். நகராட்சியில் மிகவும் மோச மான துறை சுகாதாரத்துறை தான் உள்ளது. எப்போ கேட்டாலும் பதில் தான் சொல்கிறீர்கள். வேலை ஒன் றும் நடப்பதாக தெரியவில்லை. பதில் சொல்வது விட்டு, புகார் வரா மல் இருக்கும் வகையில் பணி செய் யுங்கள். மேஸ்திரிகளை அழைத்து எச்சரித்து வேலை செய்ய சொல் லுங்கள், என்றார். சுகாதாரம் குறித்து கவுன்சிலர்கள், தலைவர் முன் வைத்த அடுக்கடுக்கான குற்றச் சாட்டு குறித்து சுகாதார ஆய்வா ளர் சந்தாகிருஷ்ணன், புகார்கள் வராதபடி நடவடிக்கை எடுக்கப் படும், என்றார்.