100 நாள் வேலை திட்டத்தில் குறைவான கூலி கரைப்புதூர் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
திருப்பூர், ஆக.1- கரைப்புதூரில் 100 வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.90க்குக் கீழ் கூலி வழங்கப்படு கிறது. இதனால் மூன்று வேளை உணவு கூட உண்ண முடியவில்லை என மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் வேத னையுடன் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கரைப்புதூர் கிராம 100 வேலை திட்ட தொழிலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கரைப்புதூர் கிராமத்தில் 40 க்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலை செய்து வருகிறோம். இதில் மாற்றுத் திறனாளிகள் 4 பேர் உள்ளனர். இதில் வேலை செய்தவர்களுக்கு 90 நாட்கள் கடந்தும் இன்னும் கூலி வழங்கப் படவில்லை. மேலும் பலருக்கு ரூ.90க்குக் கீழ் தான் தினக்கூலி வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து மூன்று வேளை உணவு கூட உண்ண முடியவில்லை. எனவே எங்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது. தொழிற்சங்கங்கள் கோரிக்கை சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப், ஏடிபி, பிஎம்எஸ், டிடி எம்எஸ் உள்ளிட்ட அனைத்து பனியன் தொழி லாளர் சங்கங்களின் திங்களன்று மாவட்ட ஆட்சியர் வாயிலாக பிரதமருக்கு மனு அளித் தனர். இதில், அமெரிக்கா 50% வரியை உயர்த்தியுள்ளது. திருப்பூரில் 2500 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 20ஆயிரத் திற்கும் மேற்பட்ட துணை அலகுகளில் ஏற்று மதி மற்றும் பணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. மத்திய அரசு ஒரு சிறப்பு நிதியை ஒதுக்கி, ஏற்றுமதி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்களின் வாங்கும் சக்தியை அதி கரிக்கவும் போதுமான மற்றும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் வரி விதிப்பு முறையால் வருமானம், வேலை இழக்கும் தொழிலா ளர்களுக்கு ‘ஜவுளித் தொழிலாளர் மறு வாழ்வு நிதித் திட்டத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல்ல டம் தாலுகா செயலாளர் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, செம்மி பாளையம் பகுதியில் துவங்கி கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வரை புதிதாக கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு டிஜிட்டல் நில அளவை செய்யப்ப டுவதற்கான குறியீடுகள் ஆங்காங்கே தென்ப டுகிறது. கோவை நகரை சுற்றியுள்ள பகுதிக ளில் குறுக்கும், நெடுக்கும் ஏராளமான சாலை கள் உள்ளன அதை அகலப்படுத்தி கொள்ள லாம். அதை விட்டுவிட்டு 1400 ஏக்கர் விவ சாய நிலங்களை பாதிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டு வருவது ஏற்புடையதல்ல. எனவே, இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விடுதிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சிபிஎம் கோரிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி நக ராட்சி நிர்வாகத்தால் அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வணிக வளா கம் கட்டிடம் 2024 டிசம்பர் மாதம் திறக்கப்பட் டது. இருப்பினும் இன்னும் மக்கள் பயன்பாட் டுக்கு வரவில்லை. புதிய பேருந்து நிலையம் அருகில் ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வரும் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் பணி களை விரைந்து முடிக்க வேண்டும். பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். சந்தை அருகே கட்டப்பட் டுள்ள வீடற்றவர்கள் தங்கும் விடுதியை மக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆட்டையாம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறக்க வேண்டும். செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பணியாளர் நக ரில் கட்டி முடிக்கப்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை உடனடியாக மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட் டுள்ளது. வாகனங்கள் சட்டத்திற்கு புறம்பாக அடகு: திருப்பூர் மாநகர இரண்டு சக்கர வாகன ஆலோசகர் நலச்சங்கத்தினர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறோம். முறையாக ஆர்.சி புக் ஆவணங்கள் வாங்கி, சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அலுவலகம் வைத்து நடத்தி வருகிறோம். இந்நிலையில், சிலர் கடந்த ஒரு சில வருடங்களாக வாக னத்தை மட்டும் அடமானமாக பெற்றுக் கொண்டு, அதில் வட்டியும் வாங்கிக் கொண்டு வாடிக்கையாளர்களை தவணை கட்ட விடு வதில்லை. இது குறித்து நாங்கள் போய் கேட்டால் வாகனம் எங்கள் வசம் இல்லை என்று பொய் சொல்லி அலைக்கழிக்கின்ற னர். இதனால் எங்கள் தொழில் மிகவும் நசிந்து விட்டது. எனவே இதுபோல் சட்டத்திற்கு புறம் பாக வாகனத்தை அடமானமாக பெறும் நபர் கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.