பாடி முதல் திருநின்றவூர் வரை நெடுஞ்சாலையை விரிவுபடுத்துக
அம்பத்தூர், ஜூலை 13- போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள நெடுஞ்சாலையை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என எஸ்டேட் இன்ஜினியரிங் சங்க மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இன்ஜினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) 43ஆவது மாநாடு அம்பத்தூரில் தோழர்கள் பி.என்.உண்ணி, சு.லெனின் சுந்தர் நினைவரங்கில் ஞாயிறன்று (ஜூலை 13) நடைபெற்றது. தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஜி.சீனிவாசன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். எஸ்.ராம்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் சு.பால்சாமி வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.முரளிகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத்தலை வர் எல்.பி.சரவணத்தமிழன் வரவேற்றார். ஆர்.கிருஷ்ணன் நன்றி கூறினார். தீர்மானங்கள் தினசரி லட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரக் கூடிய சென்னை திருவள்ளூர் நெடுஞ் சாலையை விரிவுபடுத்த வேண்டும், காக்களூர் தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை மற்றும் உட்புறச் சாலை களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக கே.ரவிச்சந்திரன், செயலா ளராக சு.பால்சாமி, பொருளாளராக முரளி கிருஷ்ணன் உள்ளிட்டு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.