tamilnadu

img

வேலை வாங்கித்தருவதாக மோசடி: 3 ஆண்டு சிறை தண்டனை

வேலை வாங்கித்தருவதாக மோசடி: 3 ஆண்டு சிறை தண்டனை

கோவை, ஜூலை 16- வேலை வாங்கித்தருவதாகக்கூறி  ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரிடம் இருந்து ரூ 15 லட்சம் பெற்றுக் கொண்டு  மோசடி செய்த குமாரசிவன் என்பவ ருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோயம்புத்தூர் 7ஆவது குற்ற வியல் நடுவர்  தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாயத்து யூனியன் உதவி இயக் குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற வேலா யுதம் என்பவர் தாக்கல் செய்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நடை பெற்ற வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. குமாரசிவன் தனது இரு மகன்களுக்கு மத்திய கலால் துறை யில் வேலை தருவதாக கூறி ரூ 15 லட்சம் பெற்றுள்ளார். ஆனால்  வேலை  வாங்கித்தாராத நிலையில்  பணத்தை  திரும்பக் கேட்டபோது, அவர் ரூ 4  லட்சம் மட்டுமே திரும்பித் தந்திருக்கி றார். மீதமுள்ள தொகைக்கு பல முறை  உறுதியளித்தும் திரும்பத் தராததால் வேலாயுதம் கோவை காவல் ஆணை யரிடம் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து,  கோவை குற்றவியல் 7 ஆவது நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை  நீதிபதி கே.இந்திர ஜித் விசாரித்து வந்தார். விசாரணை முடிவில், இந்திய தண்டனை சட்டப்  பிரிவு 420-ன் கீழ் குமாரசிவன் குற்ற வாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். விசா ரணையில்  அரசு தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் பகவத்சிங் ஆஜராகி வாதிட்டு வந்தார். நீதிமன்றம், குமார சிவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை  மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்துள் ளது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப் பில் கூறப்பட்டிருக்கிறது.

களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என  வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 2 ஆம் நாளாக புதனன்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் சுதாகர், செயலாளர் செல்லமுத்து, பொருளாளர் இளங்கோ, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.