203 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
நாமக்கல், அக்.8- குமாரபாளையம் வட்டத்தை சேர்ந்த 203 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உட்பட ரூ.1.47 கோடி மதிப் பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் வட்டம், எலந்தகுட்டை ஈ.காட்டூர் ஆர்.என். மஹாலில் புதனன்று பாதரை மற்றும் வீரப்பம்பாளையம் ஆகிய பகு திகளில் வசிக்கும் 203 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் விலை யில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறு தல் ஆணை, புதிய குடும்ப அட்டை களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் இ.பிரகாஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, சார் ஆட்சியர் அங்கித் குமார் ஜெயின், குமாரபாளையம் வட்டாட்சி யர் பிரகாஷ் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
