சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
திருப்பூர், அக்.12- பல்லடம் யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் சர்வதேச பெண் குழந் தைகள் தினம் கொண்டாடப் பட்டது. பல்லடம், சேடபாளை யத்தில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் யங் இந்தியன்ஸ் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோருடன் இணைந்து அக்.11 (சனியன்று), சர்வதேச பெண் குழந்தை கள் தினம் கொண்டாடப்பட்டது. மாண வர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப் பற்ற தொடுதலைப் புரிந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் விளக்கப் படங் கள், விளக்கக் காட்சிகள் மற்றும் வீடியோக் கள் மூலம் நடத்தப்பட்டன. மேலும், மாண வர்களுக்கு பாதுகாப்பு புத்தகங்கள் வழங்கப் பட்டன. தொடர்ந்து, சைபர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடை பெற்றன. மாணவர்களுக்கு தங்களை ஆன் லைனிலும், ஆஃப்லைனிலும் பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதன்ஒரு பகுதியாக, சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கையெழுத்து பிரச்சாரத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பெண் குழந்தைகளின் உரிமை கள் மற்றும் சுதந்திரங்களை மதிப்பதாக உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிறுவனம் சாரா பாது காப்பு அலுவலர் சதீஷ் மற்றும் குழந்தைகள் உதவி மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் ஆகியோர் பங்கேற்று, பொறுப் பான மற்றும் சமத்துவமான சமூகத்தை உரு வாக்குவதில் இத்தகைய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். யங் இந்தியன்ஸ் தலைவர் மோகன் மற்றும் துணைத் தலைவர் விமல்ராஜ், பாலின சமத்து வம் மற்றும் பெண்களின் உரிமைகளை எடுத் துரைத்தனர். சித்ரா தலைமையில் யங் இந்தி யன்ஸ் மாசூம் குழுவைச் சார்ந்த விஜி, கீர்த்தனா தேவி, மற்றும் தளிர் குழு தலை வர் மேனகா பொன்னுசாமி ஆகியோர் வகுப்பு களை நடத்தினர். இந்நிகழ்வினை பள்ளி தாளாளர் எம். சாவித்திரி ராஜகோபால், பள்ளி செயலாளர் எஸ்.ஆர்.வினோதரணி, முதல் வர் என்.விஸ்வநாதன் மற்றும் அறங்காவலர் எஸ்.ஆர்.சண்முகா பாரதி ஆகியோர் ஒருங் கிணைத்தனர். மொத்தமாக 1800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
