மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் செய்து தர வலியுறுத்தல்
திருப்பூர், ஜூலை 7 - திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் போதிய வசதிகள் செய்து தருமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநகர 23ஆவது மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாலிபர் சங்கத்தின் தெற்கு மாநகர மாநாடு ஞாயிறன்று மாநகரத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார், முன்னாள் தலைவர் ஜெயபால், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாதர் சங்க தெற்கு மாநகர தலைவர் மினி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் செய்து தர வேண்டும். மாநகரம் முழுவதும் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தெற்கு மாநகரத் தலைவராக செல்லமுத்து, செயலாளராக மௌனிஷ் கண்ணன், பொருளாளராக கல்கி உள்ளிட்ட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்டப் பொருளாளர் க.சிந்தன் நிறை வுரையாற்றினார்.
இஸ்ரேலின் இன அழிப்புப்போரை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூலை 7 - பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் சியோனிச அரசின் இன அழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி திருப்பூரில் செவ் வாயன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. மேற்காசியாவில் போர்ப் பதற்றத்தை உருவாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தைக் கண்டித்தும், காஸா மக்கள் மீது இஸ்ரேல் இனவெறி அரசு நடத்தி வரும் இன அழிப்புப் போரை உடனே நிறுத்த வலியு றுத்தியும் அகில இந்திய சமாதான ஒரு மைப்பாட்டுக் கழகம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவ லகம் எதிரில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட் டத்தில் சமாதானத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்குமாறு ஏஐபிஎஸ்ஓ திருப்பூர் மாவட்டப் பொதுச் செய லாளர் எஸ்.சுப்பிரமணி கேட்டுக் கொண்டி ருக்கிறார்.
ஜூலை 9 வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தீவிர பிரச்சாரம்
அவிநாசி, ஜூலை 7- ஜூலை 9 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, அவிநாசியில் ஐந் துக்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிறன்று தொழிற்சங்க இயக்கத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு களை திரும்பப்பெற வேண்டும். வேலை யில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது பங்குகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, சேவூர், நம்பியம்பாளையம், கருவ லூர், தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், அவிநாசி புதிய பேருந்து நிலையம், திருமு ருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தெருமு னைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கச் செயலாளர் பி.முத்துசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழனிச் சாமி, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, அவிநாசி பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியூசி சார்பில் சண்மு கம், ஷாஜகான், சேக்ஸ்பியர், எம்எல்எப் முரு கேசன், பாபு, முருகன் உள்ளிட்டோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். மேலும், சிஐடியு கட்டுமான தொழி லாளர் சங்கம் சார்பாக இருசக்கர வாகனங் களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் ராஜன், கட்டுமான சங்க ஒன்றிய நிர்வாகி பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வீடு தோறும் தொழிலாளிகளை சந்தித்து கோரிக்கை களை விளக்கி துண்டறிக்கைகள் விநியோ கம் செய்தனர். இதில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள், அவிநாசி ஒன்றியத் தலைவர் சந்தோஷ், ஒன்றிய நிர்வாகி வடி வேல், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.