நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
ஈரோடு, செப்.5- துறை மறுசீரமைப்பை இவ் வாண்டு இறுதிக்குள் நடைமுறைப் படுத்த வேண்டுமென தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சமூக நலத்துறை பணி யாளர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு வெள்ளியன்று அரசு ஊழியர் சங்க கூடலிங்கம் திடலில் நடைபெற்றது. சமூக நல அலுவலக கண்காணிப் பாளர் ர.கண்ணன் தலைமை வகித் தார். மகளிர் ஊர் நல அலுவலர் து. கோமதி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் பழைய ஓய்வூதியம் நமது உரிமை என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் செயலாளர் ச.விஜயமனோ கரன் மற்றும் சகோதர சங்க நிர்வாகி கள் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் க.துரை சிங் நிறைவுரையாற்றினார். இதில், நேரடி உதவியாளர் பணி நியமனத்தை தவிர்க்க வேண்டும். தகுதியான இளநிலை உதவியா ளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உத வியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாண்டு இறுதிக்குள் துறை மறுசீரமைப்பினை நடை முறைப்படுத்திட வேண்டும். காலிப் பணியிடங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பணி நேரம் கடந்து பணி செய்ய கட்டாயப்படுத் தும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக ஆர்.கண்ணன், செயலாளராக மு.வினோத்குமார், பொருளாளராக மு.கோகிலவேணி, மாநில செயற் குழு உறுப்பினராக கு.சக்திவேல், 3 துணைத்தலைவர்கள், 3 இணைச் செயலாளர்கள், 10 மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், 2 தணிக்கை யாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.