ஆந்திராவைப் போல் உதவித்தொகையை உயர்த்தி வழங்கிடுக
மாற்றுத்திறனாளிகள் சங்க ஈரோடு மாநாடு வலியுறுத்தல்
ஈரோடு, செப்.30- ஆந்திராவைப் போல் தமிழ் நாட்டிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் ஈரோடு மாவட்ட 5 ஆவது மாநாடு, செப்.27,28 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. செப்.27 ஆம் தேதியன்று சூரம்பட்டி நால்ரோடு பகுதியி லிருந்து மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. இதை யடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்புராஜன் உள்ளிட்ட தலை வர்கள் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, செப்.28 ஆம் தேதியன்று என்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு, சங்கத்தின் மாவட் டத் தலைவர் டி.சாவித்திரி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை எம்.ஆனந்த் ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் தோ.வில்சன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, பொருளாளர் வீ. ராஜூ ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். இம்மாநாட்டில், ஆந்திரா வைபோல் தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டும் பணி வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கும் ஏஏஒய் குடும்ப அட்டை, 35 கிலோ விலையில்லா அரிசி வழங்க வேண்டும். பேருந்து, ரயில்க ளில் பயணம் செய்ய மாற்றுத்திற னாளிகளுக்கு பஸ்பாஸ் மற்றும் ரயில் பாஸ் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறு தொழில், சொந்த தொழில் செய் வதற்கு கடனுதவி வழங்க வேண்டும். மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் திலும், கோட்டாட்சியர் அலுவல கத்திலும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் மாவட்டத் தலைவராக டி. சாவித்திரி, செயலாளராக ப. மாரிமுத்து, பொருளாளராக எஸ்.ரேணுகா, துணைத்தலை வர்களாக வீ.ராஜூ, எஸ்.செந் தில்குமார், டி.சுப்பிரமணி, துணைச்செயலாளர்களாக ஏ. பி.ராசு, ஆர்.ரமேஷ், கே.தங்க மணி உட்பட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. முடிவில், சொங்கப்பன் நன்றி கூறினார்.
