மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகள் சங்க தாராபுரம் வட்டாரப் பொருளாளர் பாத்திமா தலைமையில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் என்.கனகராஜ் உள்பட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.