tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஏரியில் மண் கொள்ளை

தருமபுரி, அக்.18- பென்னாகரம் அருகே ஏரியில் அனுமதியின்றி மண்  எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சி யர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அஞ்சேஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பளிஞ்சார அள்ளி பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கெம்மன் குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆக்கிரமித்துள்ள முள்செடிகளை அகற்றி, கரைகள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, விவசாயப் பயன்பாட்டிற்காக வண் டல் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று ஒப்பந்தக் காலம் முடிவடைந் தது. ஆனால், ஏரியில் உள்ள கிராவல் மண்ணை அனு மதியின்றி சிலர் பொக்லைன் இயந்திரங்களை பயன்ப டுத்தி எடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வரு கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அஞ்சே அள்ளி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்காததால், வெள்ளியன்று ஏரியில் மண் எடுத்துக் கொண்டிருந்த வாகனத்தை சிறைபிடிக்க முயன்றனர். இதையறிந்த அடையாளம் தெரியாத நபர் கள் வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து பென்னாகரம் வட்டாட்சியர் சண்முக சுந்தரம் கூறுகையில், பென்னாகரம் மற்றும் பாப்பாரப் பட்டி பகுதிகளில் வண்டல் மண் எடுப்பதற்கு அவ்வப் போது இணையம் வாயிலாக விண்ணப்பம் அளிக்கப் பட்டு, அதனடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையி லான அலுவலர்கள் கண்காணிப்பு பணி மேற்கொள்ளாத தால், ஏரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற் பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முறையாக ஆய்வுசெய்து அனுமதியின்றி ஏரிகளில் மண் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப் படும், என்றார்.

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்

உதகை, அக்.18- குன்னூர் சுற்றுவட்டராப் பகுதியில் பெய்து வரும்  கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் வீடு சேதம டைந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதி யில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலை யில், குன்னூர் காந்திபுரத்தில் பெய்த மழைக்கு சனி யன்று குணசேகரன் என்பவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் உடனடி யாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட் டது. இதனிடையே, காந்திபுரம் கால்வாய் தடுப்புச் சுவர் கட்டுமானப்பணி நடப்பதால், மண்சரிவு ஏற்பட்டு  வீடு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று  பார்வையிட்டு, ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.  மீட்பு உதவிக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.