சைனிக் பள்ளியில் ஹாக்கி போட்டிகள்
உடுமலை, ஜூலை 24- உடுமலை அமராவதி நகர் சைனிக்பள்ளியில், அகில இந்திய சைனிக் பள்ளி கள் பங்கேற்கும் ஹாக்கி போட்டிகள் வியாழனன்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே யுள்ள அமராவதிநகரில், ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சைனிக்பள்ளி செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 33 பள்ளிகளில் இப்பள்ளி யும் ஒன்றாகும். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னி ரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், மலையேற்றம், துப்பாக்கி சுடுதல், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்தும் பயிற்சி வழங் கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 33 சைனிக்பள்ளி களில் குழுநிலை போட்டிகளில் வெற்றி பெற்ற 18 சைனிக்பள்ளிகளின் 24 ஹாக்கி அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஜூனி யர், சப்ஜூனியர் பிரிவுகளில் தங்களது திற மையை வெளிப்படுத்தும் விதமாக லீக், நாக் அவுட் மற்றும் இறுதி போட்டிகள் வியாழ னன்று துவங்கி வரும் ஜூலை 30 ஆம் தேதி வரை உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டிக ளை பள்ளி முதல்வர் கேப்டன் கே.மணிகண் டன் துவக்கி வைத்தார்.