பாஜக ஆளும் ஒடிசாவில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் பசுவைக் கொன்றதாக தலித் இளைஞர் அடித்துக் கொலை
புவனேஸ்வரம் பாஜக ஆட்சி அமை ந்த பின்பு ஒடிசா மாநிலத்திலும் பசு குண்டர்களின் அட்டூழி யம் தொடங்கியுள்ளது. ஒடி சாவின் தியோகர் மாவட் டத்தில் பசுவைக் கொன்ற தாக 35 வயது தலித் இளை ஞர் கும்பல் படுகொலை செய் யப்பட்டுள்ளார். செப்டம்பர் 3ஆம் தேதி தியோகர் மாவட்டம் ரியா மால் காவல்நிலைய எல் லைக்குள் வரும் குண்டய் ஜூரி கிராமத்தில் தோல் பத னிடும் தொழில் செய்யும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிஷோர் சமார், அவரது நண் பர் கவுதம் நாயக் ஆகிய இரு வரும் மாட்டிறைச்சி வைத்து இருந்ததாக கூறி பசு பாது காப்பு குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குத லில் படுகாயமடைந்த இரு வரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பினர். ஆனால் கிஷோர் சமார் ரியாமால் அருகே வாயில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்தார். கவுதம் நாயக் மயக்கமடைந்த நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என் றும் கூடுதல் தகவல் வெளி யாகியுள்ளது.