tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மலைவாழ் மக்கள் சங்க இடைக்கமிட்டி மாநாடு

ஈரோடு, செப்.28- மலைவாழ் மக்கள் சங்க குத்தி யாலத்தூர் வட்டார மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் ஈரோடு மாவட்டம், குத்தியாலத் தூர் மலை வட்டார 10 ஆவது மாநாடு, கடம்பூரில் ஞாயிறன்று நடைபெற்றது. வட்டார தலைவர் பி.தங்கவேல் தலைமை வகித்தார். குப்புசாமி கொடி யேற்றினார். ஜெ.பரமசிவம் வரவேற் றார். பசுவராஜ் அஞ்சலி தீர்மானத்தை  வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து துவக்கவுரையாற்றினார். சி. சின்னசாமி, பி.சடையப்பன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மலை வாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளா ளர் ஏ.பொன்னுசாமி, சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கே.மாரப் பன், சி.துரைசாமி உள்ளிட்டோர் வாழ்த் திப் பேசினர். இம்மாநாட்டில், மலை யாளி பழங்குடி சாதிச்சான்று வழங்க  வேண்டும். வன உரிமை சட்டத்தை உட னடியாக அமலாக்க வேண்டும். துணை  மின் நிலையம் அமைத்து மலை வட்டா ரத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். கடம்பூ ரில் உண்டு உறைவிட பள்ளி அமைக்க  வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் வட்டார  தலைவராக கே.ஈஸ்வரன், செயலாள ராக பி.தங்கவேல், பொருளாளராக டி. கே.வெள்ளையப்பன், உதவித்தலை வர்களாக ஈஸ்வரி, சுப்பிரமணி, உதவிச் செயலாளர்களாக ஆர்.அண்ணா மலை, ஏ.பரமசிவம் உட்பட 25 பேர்  கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட் டது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு நிறைவுரையாற்றினார். முடி வில், சி.ராஜப்பன் நன்றி கூறினார்.

பிஎம் கிஷான் திட்டத்தில் நிதி உதவி தொடர ஒன்றிய அரசு நிபந்தனை

ஈரோடு, செப்.27- பிஎம் கிஷான் திட்டத்தில் நிதி உதவி தொடர ஒன்றிய அரசு  நிபந்தனை விதித்துள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவ சாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ச.கந்தசாமி தலைமை யில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியர்  பேசுகையில், நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள்  215.4 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 65.4 மெட்ரிக் டன், பயறு வகைகள் 44.8 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 92  மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்க ளான யூரியா 2715.7 மெட்ரிக் டன், டி.ஏ.பி 2934 மெட்ரிக் டன்,  பொட்டாஷ் 2202 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 7520 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவை யான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.  விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வேளாண்மை விரி வாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயி கள் இவற்றைப் பெற்று பயன் பெறலாம். மேலும் விவ சாயிகளுக்குத் தேவையான பூச்சிமருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தனியார் மற்றும்  கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரி பார்த்து உறுதிசெய்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெற முடியும் என ஒன்றிய அரசால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎம் கிசான் நிதி உதவி  பெற்று வரும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். உழவர்கள் பொது சேவை மையத்தை அணுகி விவ சாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற வேளாண்மைத்துறை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து 65 கோரிக்கை மனுக்கள் பெற்று மேல் நட வடிக்கைக்காக உரிய அலுவலர்களிடம் வழங்கினார்.

குழாயில் உடைப்பு: குடிநீர் வீண்

உதகை, செப்.28- உதகை, டைகர் ஹில் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் சனியன்று உடைப்பு ஏற்பட்டது. உதகை நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதுதவிர டைகர் ஹில் அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோடப்பமந்து, நொண்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பெய்த மழையின்போது, தலையாட்டு மந்து பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் டைகர் ஹில் அணையிலிருந்து வரும் பிரதான குடிநீர் குழாய் உள்ளது. தற்போது இங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், இக்குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதில் ராட்சத குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரால், அப்பகுதி முழுக்க சேறும், சகதியுமாக மாறியது. மேலும், அப்பகுதியில் இருந்த இரு வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தன. இதுகுறித்த தகவலின்பேரில், நகராட்சி ஊழியர்கள், அணையிலிருந்து வரும் தண்ணீரை நிறுத்தி, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் பல்லாயிரக்கானக்கான லிட்டர் குடிநீர் வீணானது.

பட்டுக்கூடு விற்பனை

தருமபுரி, செப்.28- தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு கள் விற்பனை அதிகரித்தது. தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு  அங்காடிக்கு, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த 51 விவசாயிகள் வெண் பட்டுக்கூடுகளை  சனியன்று விற்பனைக்கு கொண்டு வந்தனர். 3,890.02  கிலோ வெண் பட்டுக்கூடுகள் 102 லாட்டுகளாகப் பிரிக்கப் பட்டு, தரத்துக்கேற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.735, குறைந்தபட்சமாக ரூ.376, சராசரியாக ரூ.622 என  விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், ரூ.24  லட்சத்து 33 ஆயிரத்து 477க்கு வர்த்தகம் நடைபெற் றது.

குடிபோதையில் விபத்து: 3 ஆண்டு சிறை

உதகை, செப்.28- கூடலூரில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்ப டுத்தியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீல கிரி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகை, நொண்டி மேடு பகுதி யைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (74). இவர் சுற்றுலா வழி காட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த  9.2.2022 ஆம் தேதி இவருடயை சகோதரி வீட்டு விசேஷ  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூடலூர் அடுத்த  நடுவட்டம் டிஆர் பஜார் பகுதிக்கு ஒரு நாள் முன்னதாக  சென்றார். அப்போது, வீட்டின் முன் ஆபிரகாமும், அவ ருடைய சகோதரி மற்றும் உறவினர் ஷாலினி ஆகியோர்  பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் – உதகை  சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று, பேருந்து நிறுத் தம் மீது மோதி, ஷாலினி மீது மோதி விபத்துக்குள் ளானது. இதில் படுகாயமடைந்த ஷாலினி மீட்கப் பட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் இருந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். விசாரணையில் காரை  ஓட்டி வந்தது கேரள மாநிலம், தலச்சேரி பகுதியைச்  சேர்ந்த ஸ்ரீநாத் (42) என்பதும், மது போதையில் அவர் கார் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு  விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று  வந்த நிலையில், சனியன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில்,  குடிபோதையில் விபத்து ஏற்புடைய ஸ்ரீநாத்துக்கு மூன்று  ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம்  விதித்து நீதிபதி எம்.செந்தில் குமார் உத்தரவிட்டார்.