வேளாண்மைக்கல்லூரி அமைக்க வேண்டும் மலைவாழ் இளைஞர் சங்க வலியுறுத்தல்
சேலம், ஜூலை 7 – கல்வராயன் மலை கிளாக்காட்டில் உள்ள மயானத்தை மேம்படுத்தி எரி மேடை அமைத்து கொடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் களை கல்வராயன் மலைப்பகுதியில் மலை வாழ் இளைஞர் சங்க ஆறாவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் 6 ஆவது மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், மாநிலப் பொருளாளர் கே.எஸ்.பாரதி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி. பெரியசாமி, பொருளாளர் எம்.வெற்றி வேல் பங்கேற்று உரையாற்றினர். இதில், கிளாக்காட்டில் உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும். கருமருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பலாப்பண்ணையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். கருந்துறை பகுதியில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும். இப்பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தலைவராக நீலகண்டன், செயலாளராக ஏ.மணி, பொருளாளராக பரமசிவம் உள்ளிட்ட 13 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இதில் திரளான மலைவாழ் இளைஞர்கள் பங்கேற்றனர்.