அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்
கோவை, ஆக. 18 - அரசு போக்குவரத்து தொழிலா ளர்களின் வாழ்வாதார கோரிக்கை களை முன்வைத்து சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் திங்களன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி னர். 2023 ஏப்ரல் 1 க்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கு பழைய பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டும். 24 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை உடனே வழங்க வேண்டும். பணியில் இருக்கும் ஊழி யர்கள் பெறும் அகவிலைப்படியை ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 7 ஆவது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் திங்களன்று மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன்ஒருபகுதியாக, கோவை சுங் கம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங் கம் (சிஐடியு) மண்டலத் தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித் தார். இதில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர்கள் சம்மேளனம் மாநில துணை பொதுச்செயலாளர் கனகராஜ், மண்டல பொதுச் செயலாளர் வேளாங் கண்ணிராஜ், சிஐடியு மாவட்டச் செய லாளர கிருஷ்ணமூர்த்தி, ஓய்வூதியர் கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் அரு ணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மண்டல தலைமை அலுவல கம் முன்பு நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகித்தார். மண்டலப் பொருளாளர் சி.அய்யாசாமி வரவேற்றார். பிஎஸ்என்ல் ஓய்வு பெற் றோர் அமைப்பின் சார்பில் சி.பரமசி வம், அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி ராமசாமி, சிபிஎம் பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ச்சுனன், பிஎஸ்என்எல் மாநில செயலாளர் குப்புசாமி, சிஐடியு மாவட்டச் செய லாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பன்முக தலைவர் என்.முரு கையா, மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி மற்றும் திரளான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். சேலம் சேலம் மாவட்டம், மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் கள், அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் சார்பில் நடை பெற்ற போராட்டத்திற்கு அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மண்டல பொதுச் செயலாளர் கே.செம் பன் தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, மண்டலப் பொருளா ளர் சேகர், அரசு விரைவு போக்கு வரத்து சிஐடியு சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என். முருகேசன், ஓய்வு பெற்ற தொழிற் சங்கத்தின் மாநில நிர்வாகி மணிமுடி, சிஐடியு ஓய்வு பெற்ற தொழிற்சங்கத்தின் ஒருங் கிணைப்பாளர் கலைச்செல்வன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற நிகழ்விற்கு சங்கத்தின் மண்ட லத் தலைவர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராசன் துவக்கி வைத்து பேசினார். மண்டல துணைத்தலைவர் சி. முரளி, பொருளாளர் என். மயில்சாமி மற்றும் மனோன்மணி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுருளி நாதன், மாவட்டச் செயலாளர் ஏ. தெய்வானை ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நான்கு முதல்வர்கள் மாறிவிட்டனர்
கோவையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், சிஐடியு தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் மாநில துணை பொதுச் செயலாளர் கனகராஜ் பேசுகையில், தமிழகம் முழுவதும் தலைமை, கோட்ட அலுவலம் என 21 மையங்களில் காத்திருப்பு போரட்டம் நடந்து வருகிறது. 2003 க்கும் பிறகு பணிக்கு சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். மேலும் சென்னை உயர் நீதிமன்ற கூறிய போக்கு வரத்து பென்சன் வழங்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். 2012 இல் கொடுத்த இந்த தீர்ப்பை இதுவரை செயல்படுத்தவில்லை, 4 முதல்வர்கள் மாறிவிட்டனர். ஓய்வு பெற்ற போக்கு வரத்து ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள அக விலைப்படியை வழங்க வேண்டும். திமுக அரசு வந்த பிறகும் 4.5 ஆண்டு கள் போராடி வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த 2 ஆண்டு களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான ஓய்வு கால பணப்பலன்கள் என சுமார் 3 ஆயிரம் கோடி தர வேண்டி உள்ளது. அரசு கொள்கை முடிவு எடுத்து ஓய்வு பெறும் போதே பணப்பலன்களை வழங்க வேண் டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பொதுத்துறை போக்குவரத்தை தனியார் மயமாக்க கூடாது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 40,000 ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள தொழிலாளர்கள் இந்த காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாநில அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிவு எட்டும் வரை இந்த போராட்டம் தொடரும், போக்குவரத்து துறையை முடக்கு வது எங்கள் நோக்கம் அல்ல அரசின் கவனத்தை ஈர்க்கவே போராடுகி றோம் என்றார்.