tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் கைது

சேலம், ஆக.12- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட முயன்ற நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க நிர்வாகி கள் கைது செய்யப்பட்டதைக் கண் டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண் டும். நிலுவையிலுள்ள கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது திமுக அரசும் அந்த கோரிக்கைளை நிறைவேற்றவில்லை. இந்நிலை யில், நிலுவையிலுள்ள கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என  வலியுறுத்தி, தொடர் உண்ணாவிர தம் நடத்த சங்கத்தின் மாநில செயற் குழு முடிவு செய்தது. இந்நிலை யில் திங்களன்று இரவு தமிழகம்  முழுவதும் சங்கத்தின் நிர்வாகி களை காவல் துறையினர் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். ஜன நாயக வழியில் தங்களது நியாய மான கோரிக்கைகளுக்காக போரா டுகின்ற ஊழியர்களை அழைத்துப் பேசாமல், காவல் துறை மூலம் கைது செய்வது முற்றிலும் தொழிற் சங்க ஜனநாயகத்தின் குரல்வ ளையை நெறிக்கும் செயல். இத னைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, மாவட்ட நிர்வாகி திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் இணைச்செய லாளர் பாஸ்கர் தலைமை வகித் தார். இதில் செயலாளர் சிவக்கு மார், நிர்வாகிகள் குமார், சாந்த குமார், விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.